துறைத் தேர்வில் தேர்ச்சி பெற ஊழியர்களுக்கு 5 ஆண்டு கெடு: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

துறைத் தேர்வில் தேர்ச்சி பெற ஊழியர்களுக்கு 5 ஆண்டு கெடு: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
Updated on: 
1 min read

சென்னை: துறைத் தேர்​வு​களில் 5 ஆண்​டுகளுக்​குள் தேர்ச்சி பெறாத பணி​யாளர்​களின் தகுதி​காண் பரு​வத்தை முடிவுக்​குக் கொண்டு வந்து, அவர்​களைப் பணி​யி​லிருந்து விடுவிக்க வேண்​டும் என்று பள்​ளிக்​கல்​வித் ​துறை உத்​தர​விட்​டுள்​ளது.

இது​குறித்து பள்​ளிக்​கல்வி இயக்​குநரகம் சார்​பில் அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பப்​பட்​டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை​யில் கருணை அடிப்​படை உள்​ளிட்ட பல்​வேறு முறைகளில் உதவியாளர்​கள், இளநிலை உதவியாளர்​கள் மற்​றும் தட்​டச்​சர்​கள் நியமனம் செய்​யப்​படு​கின்​றனர். இவர்​களுக்​கான தகுதி​காண் பரு​வத்தை, தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர்​கள் சட்ட விதி​யின்​படி, துறைத் தேர்​வு​களில் தேர்ச்சி பெறு​வதற்​காக அதி​கபட்​சம் 5 ஆண்​டுகள் வரை நீட்​டிக்​கலாம்.

ஆனால், 5 ஆண்​டுக்​குள் கட்​டாயம் துறைத்​ தேர்​வு​களில் தேர்ச்சி பெற​வேண்​டும். இல்லை​யெனில் பணி​யாளர்​களின் தகுதி காண் பரு​வத்தை முடிவுக்​குக் கொண்டு வந்து, பணி​யி​லிருந்து விடுவிக்க வேண்டும்.

அவர்​களைப் பணி​யில் தொடர்ந்து அனுமதிக்க நியமன அலு​வலர்​களுக்கு அதி​காரம் கிடை​யாது என்று அரசால் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. எனவே, 5 ஆண்​டுகள் கடந்​தும் துறைத் தேர்​வு​களில் தேர்ச்சி பெறாதவர்​களின் தகுதி​காண் பரு​வத்தை முடிவுக்​குக் கொண்டு வரு​வதுடன், உரிய நட​வடிக்கை எடுக்க வேண்​டும் என்று அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அறி​வுறுத்​தப்​படு​கிறது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

துறைத் தேர்வில் தேர்ச்சி பெற ஊழியர்களுக்கு 5 ஆண்டு கெடு: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
தோனி முதல் பதிரனா வரை: 10 ஐபிஎல் அணிகள் விடுவித்த வீரர்களின் முழு விவரம்

X