

புதுச்சேரி: டித்வா புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் சனிக்கிழமை (நவ.29) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டித்வா புயலால் புதுச்சேரிக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மாலை கல்வியமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்ட உத்தரவில், ‘டித்வா புயல் காரணமாக அதிக கனமழை பொழியும் என்பதால் நாளை (நவ.29) புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது’ என தெரிவித்துள்ளார்.
விமான சேவைகள் ரத்து:
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து இயக்கப்படும் விமான சேவைகள் அனைத்தும் நாளை (சனிக்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஹதராபாத்தில் இருந்து புதுவைக்கு வரும் விமானமும், புதுவையில் இருந்து பெங்களூரு சென்று வரும் விமானமும், புதுவையில் இருந்து ஹைதராபாத் செல்லும் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை விமான நிலைய இயக்குனர் ராஜசேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.