வங்கக் கடலில் நிலைகொண்ட ‘அக்வான்’ புயல் தீவிரமாகிறது

சென்னை, திருவள்ளூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் நிலைகொண்ட ‘அக்வான்’ புயல் தீவிரமாகிறது
Updated on: 
1 min read

சென்னை: தென்​மேற்கு வங்​கக் கடலில் நிலை கொண்​டுள்ள அக்வான் புயல் வலுவடைந்து, நவ.20-ம் தேதி ஆந்​திர கடற்கரையை மிகத் தீவிரப் புய​லாக கடக்கவுள்​ளது. இதனால், சென்னை, திருவள்​ளூரில் நாளை (நவ.19) கனமழை பெய்​யக்​கூடும்.

இது​குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்​தின் விஞ்​ஞானி வி.ஆர்.துரை நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பில் கூறியிருப்பதாவது:

திங்​கள்​கிழமை (நவ.16) தென்​கிழக்கு மற்​றும் அதை​யொட்​டிய தென்​மேற்கு வங்​கக்​கடல் பகுதி​களில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்தத் தாழ்வு மண்​டலம் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அதேநாள் அக்​வான் புய​லாக வலுப்​பெற்று தெற்கு வங்​கக்​கடல் மத்​தியில் நில​வியது.

இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து செவ்​வாய்க்கிழமை காலை (நவ.17) அதே பகுதியில் நில​வியது. இது மேலும் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்​திய மேற்கு வங்​கக்​கடல் பகுதி​யில் தீவிர புய​லாக வலுப்​பெறவுள்​ளது. மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து நவ.19-ம் தேதி காலை மிகத் தீவிரப் புய​லாகும்.

இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, நவ.20-ம் தேதி நண்​பகல் நெல்​லூர் - துனி இடையே ஆந்​திர கடற்​கரையை மிகத் தீவிரப் புய​லாக கடக்​கக்​கூடும். அப்​போது மணிக்கு 120 முதல் 130 கிமீ வேகத்​திலும், இடை​யிடையே மணிக்கு 145 கிமீ வேகத்​திலும் காற்று வீசக்​கூடும்.

புயல் காரண​மாக, நவ.18-ம் தேதி சென்னை, திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் மித​மான மழை பெய்​யக்​கூடும். நவ.19-ம் தேதி சென்னை, திரு​வள்​ளூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்​யக்​கூடும். செங்​கல்​பட்டு, காஞ்​சிபுரம், விழுப்​புரம், கடலூர் ஆகிய 4 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி​யிலும் மித​மான மழை பெய்​யக்​கூடும். இதுதவிர மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் லேசான மழை பெய்​யக்​கூடும்.

சென்னை மற்​றும் புறநகர் பகுதி​களில் புதன்​கிழமை வானம் பொது​வாக மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகுதி​களில் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

வடதமிழக கடலோரப் பகுதி​களில் நவ.21-ம் தேதி வரை​யும், தென் கிழக்கு வங்​கக்​கடல் பகுதி​யில் நவ.18-ம் தேதி வரை​யும் தென்​மேற்கு வங்​கக்​கடல் பகுதி​யில் நவ.19-ம் தேதி வரை​யும், மத்​திய மேற்கு, மத்​திய கிழக்கு வங்​கக்​கடல் பகுதி​யில் நவ.18-ம் தேதி வரை​யும் பலத்த சூறாவளி காற்​று வீசும்.

இது​த​விர, ஆந்​திர கடலோரப் பகுதி​களில் நவ.20-ம் தேதி 145 கிமீ வேகம் வரை மிக பலத்த சூறாவளி காற்று வீசும். எனவே, இப்​பகுதி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம் என எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது.

வங்கக் கடலில் நிலைகொண்ட ‘அக்வான்’ புயல் தீவிரமாகிறது
தோனி முதல் பதிரனா வரை: 10 ஐபிஎல் அணிகள் விடுவித்த வீரர்களின் முழு விவரம்

X