அம்மா உணவகத்தில் தோசையா? - கம்பம் தவெக எம்எல்ஏ மீது விமர்சனம்

அம்மா உணவகத்தில் தோசையா? - கம்பம் தவெக எம்எல்ஏ மீது விமர்சனம்
Updated on
1 min read

கம்பம்: கம்​பம் தொகுதி தவெக எம்​எல்ஏ ஜெக​நாத்​மிஸ்​ரா, சில நாட்​களுக்கு முன்பு கம்​பத்​தில் உள்ள அம்மா உணவகத்தை ஆய்வு செய்​தார். அப்​போது அங்கு தோசையை சாப்பிட்டு விட்டு அதன் தரத்தை சோதனை செய்​தார்.

இதுகுறித்த வீடியோ​வும் அவர் தரப்​பில் இருந்து வெளி​யிடப்​பட்​டது. இதைப் பார்த்த நெட்​டிசன்​கள் பலரும் அம்மா உணவகத்தில் இட்​லி, பொங்​கல், சாம்​பார் சாதம் உள்​ளிட்ட கலவை சாதமே விற்​பனை செய்​யப்​படு​கின்​றன. தோசை அங்கு சுடப்படு​வ​தில்​லை. வெளியில் இருந்து வாங்​கி வந்த தோசையை அம்மா உணவகத்​தில் வைத்து சாப்​பிட்டு விட்டு ரீல்ஸ் வெளி​யிட்டு எம்​எல்ஏ விளம்​பரம் தேடு​கிறார் என்று விமர்​சனம் எழுந்தது.

இதுகுறித்து எம்​எல்ஏ ஜெக​நாத் மிஸ்ரா கூறுகை​யில், கம்​பம் அம்மா உணவகத்​தில் இட்லி அவிக்​கும் பெரிய கொப்​பரை பழுதடைந்​துள்​ள​தால், பல ஆண்​டு​களாக இங்கு தோசை வழங்​கப்​படு​கிறது இது தெரி​யாமல் தவறான தகவல் பரப்​பப்​பட்டு வரு​கிறது என்​றார். இதனைத் தொடர்ந்​து, அம்மா உணவக ஊழியர்​களின் கருத்​துகளும் பரவி வருகின்றன.

அம்மா உணவகத்தில் தோசையா? - கம்பம் தவெக எம்எல்ஏ மீது விமர்சனம்
வாட்ஸ்அப் சிஇஓ-வாக கிரெட் நிறுவனர் குணால் ஷா நியமனம்: மெட்டா அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in