தொடர் விடுமுறை எதிரொலி - பழனியில் குவியும் பக்தர்கள்

தரிசனத்துக்கு 4 மணி நேரம் காத்திருப்பு
தொடர் விடுமுறை எதிரொலி - பழனியில் குவியும் பக்தர்கள்
Updated on: 
1 min read

பழனி: தொடர் விடுமுறையை முன்னிட்டு, பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

காந்தி ஜெயந்தி விடுமுறை, சனி, ஞாயிறு வார விடுமுறை என 3 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் வெள்ளிக்கிழமை (அக்.2) அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 4 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு கட்டண தரிசனத்துக்கு நுழைவுச் சீட்டு வாங்குவதற்கே 2 மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அன்னதானம் வழங்கும் இடத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ரோப் கார் மற்றும் வின்ச் ரயிலில் மலைக்கோயிலுக்கு 2.30 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சென்றனர். பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, மலையேறும் மற்றும் இறங்கும் பாதைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளன.

அதன்படி, மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

பழனி அடிவாரம், சந்நிதி வீதி, குளத்து சாலை, பூங்கா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பக்தர்கள் வந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழனியில் இருந்து சென்ற மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட வெளியூர் பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது.

தொடர் விடுமுறை எதிரொலி - பழனியில் குவியும் பக்தர்கள்
‘இரு மொழி கொள்கை விவகாரத்தில் விளையாட வேண்டாம்’ - தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in