டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டணத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டணத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: டிஜிட்டல் பரிவர்த்​தனைக்கு கட்​ட​ணம் என்ற யோசனையை மத்​திய அரசு உடனடி​யாக திரும்​பப்​பெற வேண்​டும் என மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: “எல்​லோரும் டிஜிட்​டல் பரிவர்த்​தனைக்கு மாறுங்​கள். வங்​கி​களுக்கு அலைய வேண்​டாம்.” என்​றார் பிரதமர் நரேந்​திர மோடி. இதையொட்டி தொடர்ந்து விளம்​பரம் செய்து கொண்டே இருந்​தார்.

இது பொது​மக்​கள் மீதான அக்​கறை என்று கரு​தினோம். இப்​போது, டிஜிட்​டல் பரிவர்த்​தனைக்கு கட்​ட​ணம் செலுத்த வேண்​டும் என்று கட்​டாயப்​படுத்​துகிறது மத்​திய அரசு.

பிரதமர் மோடி எதைச் சொன்​னாலும் அதில் மக்​கள் நலன் கடு​கள​வும் இருக்​காது என்​ப​தற்கு இது​வும் ஒரு உதா​ரண​மாக அமைந்​திருக்​கிறது. டிஜிட்​டல் பரிவர்த்​தனைக்கு கட்​ட​ணம் என்ற யோசனையை மத்​திய அரசு உடனடி​யாக திரும்​பப் பெற வேண்​டும். இவ்​வாறு அவர் வலி​யுறுத்​தி​யுள்​ளார்​.

டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டணத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி குழுவினருடன் பிரதமரை முதல்வர் விஜய் சந்திக்க வேண்டும்: பிரேமலதா யோசனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in