தமிழக அரசுக்கு நாங்கள் வேண்டுமா? அதிகாரிகள் வேண்டுமா? - பெ.சண்முகம் கேள்வி

தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: எஸ்.சத்தியசீலன்

தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: எஸ்.சத்தியசீலன்

Updated on
1 min read

சென்னை: சென்னையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், தலைமைச் செயலர் எம்.சாய்குமாரை பதவி நீக்கம் செய்யவலியுறுத்தியதோடு, தமிழக அரசுக்கு நாங்கள் வேண்டுமா? அல்லது அதிகாரிகள் வேண்டுமா? என்று கேள்வி எழுப்பி யுள்ளார்.

தமிழக அரசின் தலைமைச் செயலர் எம்.சாய்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம் சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்றது.

கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பெ.சண்முகம் பேசுகையில், “மாணவர்கள் அமைப்பைச் சார்ந்தவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கண்காணிக்க வேண்டும் எனக்கூறி, தலைமைச் செயலர் தலைமையிலான குழு சுற்றறிக்கை அனுப்புகிறது.

இது தெரியாமல் நடந்துவிட்டது என்கிறார்கள். அதை எப்படி எடுத்துக்கொள்வது? அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகிறார்களா? அவ்வளவு விவரம் இல்லாதவரை, தவறாக சுற்றறிக்கை விடுபவரை எதற்காக தலைமைச் செயலராக வைத் திருக்க வேண்டும்?

இவ்விவகாரத்தில் உயர்கல்வி ஆணையருக்கு விளக்கம்கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது போல இதற்கு மூலகாரணமாக இருந்த சாய்குமார் மீதும் அரசு முறைப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக அரசின் கட்டுப்பாட்டில், அதிகாரிகள் செயல்படுகிறார்களா? அல்லது அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தமிழக அரசு இருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு முதல்வர் தான் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்த ஆட்சி அமைவதற்கும், இந்த ஆட்சி தொடர்வதற்கும் கம்யூனிஸ்ட்கள் ஆதரவு அளித்திருக்கின்றன. இடதுசாரிகளின் ஆதரவில் தான் இந்த ஆட்சி நீடிக்கிறது. இது தெரிந்தும் இடதுசாரிகள் மீது உள்நோக்கத்தோடு சுற்றறிக்கை அனுப்பும் அதிகாரிகளை வைத்து ஆட்சி செய்ய போகிறீர்களா? இடதுசாரிகளை வைத்து ஆட்சியை தொடரப்போகிறீர்களா? இதுபோன்ற நடவடிக்கைகளை எங்களால் சகித்துக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

வீரபாண்டியன் வலியுறுத்தல்: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், சென்னை பாலன் இல்லத்தின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கடந்த ஆட்சியில் வழங்கிய வீட்டை அவரது விருப்பத்தின்படி மீண்டும் அரசிடம் ஒப்படைக்கிறோம்.

டெல்டா மாவட்டங்களை வறட்சி பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க கோரி ஆக.28-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்களை இந்திய கம்யூனிஸ்ட் நடத்துகிறது. தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் அதிகமாக உள்ளது. அரிசி, சர்க்கரை விலை உயர்ந்துள்ளது.

பழங்குடியின மக்களின் நலனுக்காக தனி துறை உருவாக்க வேண்டும். மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்க கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை விவகாரத்தில் முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: எஸ்.சத்தியசீலன் </p></div>
அரசுப் பள்ளியில் அத்துமீறி நுழைந்ததாக சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே மீது எஃப்ஐஆர் பதிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in