மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் செயலர் சண்முகம், நடிகை ரோகிணி பிரச்சாரம்

மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் செயலர் சண்முகம், நடிகை ரோகிணி பிரச்சாரம்
Updated on: 
1 min read

மதுராந்தகம் ​மார்க்​சிஸ்ட் கட்சி வேட்​பாளர் சுகந்​தியை ஆதரித்து கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் சண்முகம், திண்​டுக்​கல் எம்.பி.சச்​சி​தானந்​தம், நடிகை ரோகிணி ஆகியோர் வாக்கு சேகரித்​தனர்.

மார்க்சிஸ்ட் ​கம்யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம், மது​ராந்​தகம் நகரப்​பகு​தி​யில் வீடு வீடாகச் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்​தார். அப்​போது, வாக்​களித்த மக்​களுக்கு துரோகம் செய்​து, மாற்றுக் கட்​சி​யில் இணைந்த தவெக வேட்​பாளரை புறக்​கணி​யுங்​கள் என கேட்​டுக் கொண்​டார்.

இதேபோல், திண்டுக்​கல் மக்களவை உறுப்​பினர் சச்​சி​தானந்தம் தொழுப்பேடு மற்றும் ஒரத்தி ஆகிய பகு​தி​களில், கலைக்​கழு​வினருடன் சென்று வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்​டார். இதேபோல், சரவம்​பாக்​கம் இணைப்புச் சாலை பகு​தி​யில் திரைப்பட நடிகை ரோகிணி மார்க்​சிஸ்ட் வேட்​பாளர் சுகந்திக்கு ஆதவாக வாக்கு சேகரிப்​பில் ஈடுபட்​டார்​.

மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் செயலர் சண்முகம், நடிகை ரோகிணி பிரச்சாரம்
“எம்ஜிஆர், ஜெ. போல திமுகவை தில்லாக எதிர்ப்பது நான் மட்டுமே” - தாராபுரத்தில் முதல்வர் விஜய் பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in