தவெக ஆட்சி கவிழும் என ஸ்டாலின் கூறியிருக்க கூடாது: மு.வீரபாண்டியன் கருத்து

மு.வீரபாண்டியன்

மு.வீரபாண்டியன்

Updated on
1 min read

ஓசூர்: தவெக ஆட்சி கவிழும் என ஸ்​டா​லின் கூறி​யிருக்​கக் கூடாது என இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் வீர​பாண்​டியன் கருத்து தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக கிருஷ்ணகிரி மாவட்​டம் ஓசூர் அருகே கெலமங்​கலத்​தில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் கலந்து கொண்ட அவர் பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தற்​போது திமுக கூட்​ட​ணி​யில் நாங்​கள் அங்​கம் வைத்​துள்​ளோம்.

நாளை உள்​ளாட்​சித் தேர்​தல், சட்​டப்​பேர​வை, மக்​கள​வைத் தேர்​தல் வரும்​போது, கூட்​ட​ணி​யில் தொடர்​வது குறித்து கம்​யூனிஸ்ட் கட்​சிகள் கூடி முடிவு எடுப்​போம். திமுக கூட்​டணி கட்​சி​யினர் தற்​போது தவெக​வில் அமைச்​ச​ராக உள்​ளனர். இதனால் தற்​போது கூட்​டணி இல்​லாத நிலை உள்​ளது.

தவெக ஆட்சி கவிழும் என திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் கூறி​யிருக்​கக் கூடாது. திமுக கூட்​ட​ணி​யில் நாங்​கள் இருப்​பது குறித்து கட்​சி​யின் நிர்​வாகக் குழு கூட்​டத்​துக்​குப் பிறகு முறை​யான அறி​விப்பை விரை​வில் வெளி​யிடு​வோம். தேசிய நலன் கருதி இண்​டியா கூட்​ட​ணி​யில் திமுக இருக்க வேண்​டும்.

<div class="paragraphs"><p>மு.வீரபாண்டியன்</p></div>
ஐயப்ப சேவா சமாஜ தலைவராக புதுகையை சேர்ந்தவர் தேர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in