தமிழகத்​தில் சட்​டப்​படி​யான ஆட்சி நடை​பெறுகிறது: மு.வீரபாண்டியன் கருத்து

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்

Updated on
1 min read

கும்பகோணம்: சுவாமி மலை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியது:

ரேஷன் கடைகளில் குடும்​பத்​தினரின் எண்​ணிக்​கைக்கு ஏற்​ற​வாறு உணவுப் பொருட்​களின் அளவு குறைக்​கப்​படும் என்ற மத்​திய அரசின் அறி​விப்பு ஏற்​புடையதல்ல.

விவ​சாய கடன்​களை முழு​மை​யாக ரத்து செய்ய வேண்​டும். நிதி​நிலை சீராகும்​போது மற்ற வாக்​குறு​தி​களை நிறைவேற்​றலாம். அதற்கு முன்பு விவ​சா​யிகளிடம் அதி​காரி​கள் கடன் வசூலில் ஈடு​ப​டா​மல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

தமிழகத்​தில் சட்​டப்​படி​யான ஆட்சி நடை​பெறுகிறது. மக்​கள் வாக்​களித்து அதி​காரத்​தைத் தரு​கிறார்​கள். அந்த அதி​காரத்​தின் மீது ஆளுநர் ஏறி அமரக்​கூ​டாது. தவெகவை நாங்​கள் வெளியி​லிருந்து ஆதரிக்​கிறோம். அரசி​யலுக்​காக மக்​கள் அளித்த தீர்ப்பை மதித்​தோம். எங்​களுக்கு சோபா​வும் வந்​தது​மில்​லை, கல்​லாப்​பெட்​டி​யும் வந்​தது​மில்லை என்​பது நாட்டு மக்​களுக்​குத் தெரி​யும்.

மேகே​தாட்​டு​வில் எவ்​வளவு வலு​வான அணை​யைக் கட்​டி​னாலும், அந்த அணையை உடைத்​துக்​கொண்டு காவிரி தமிழ் மண்​ணுக்​குத் தான் வரு​வாள். காவிரி​யின் திசை தமிழ் நோக்​கித் தான், டெல்​டாவை நோக்​கித் தான். அந்த இயற்​கை​யின் விதியை மாற்​றும் சக்​தி, மத்​திய அரசுக்​கும், கர்​நாடக அரசுக்​கும் இல்​லை. இவ்​வாறு அவர் கூறி​னார்.

<div class="paragraphs"><p>இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்</p></div>
கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க தடை கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in