கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க தடை கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க தடை கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு
Updated on
1 min read

மதுரை: கரூர் சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்கள் குடும்​பத்​தினருக்கு அரசு வேலை வழங்க தடை விதிக்​கக்​ கோரி நாம் தமிழர் கட்சி சார்​பில் தாக்​கல் செய்த மனுவை அவசரமாக விசா​ரிக்க உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு மறுத்து விட்டது.

உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நீதிப​தி​கள் ஜெகதீஷ் சந்​தி​ரா, பூர்​ணிமா அமர்​வில், நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறை மாநில ஒருங்​கிணைப்​பாளர் வழக்​கறிஞர் தீரன் திரு​முரு​கன் நேற்று ஆஜராகி, கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்த 41 பேர் குடும்​பங்​களைச் சேர்ந்​தவர்​களுக்கு அரசு வேலை வழங்க தடை விதிக்க வேண்​டும். இது தொடர்​பான மனுவை அவசர மனு​வாக ஏற்று விசா​ரித்து உத்​தரவு பிறப்​பிக்க வேண்​டும் எனக் கேட்​டுக்​கொண்​டார்.

இதற்கு மறுப்பு தெரி​வித்த நீதிப​தி​கள், இதில் நாங்​கள் தலை​யிட முடி​யாது. இந்த வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் உள்​ளது. இருந்​தா​லும் மனு​வாக தாக்​கல் செய்​தால் விசா​ரணைக்கு எடுக்​கப்​படும் எனக் கூறினர்.

பின்​னர் தாக்​கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கரூரில் 41 பேர் உயி​ரிழந்தது குறித்து சிபிஐ விசா​ரணைக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்ட து. விசா​ரணையை கண்​காணிக்க முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்​தோகி தலை​மை​யில் குழு​வை​யும் அமைத்தது.

இந்​நிலை​யில் கரூர் சம்​பவத்​தில் உயி​ரிழந்த 41 பேரின் குடும்​பங்​களுக்கு ஜூலை 10-ல் நடை​பெறும் விழா​வில் அரசுப் பணி நியமன ஆணை​களை முதல்​வர் விஜய் வழங்​க​வுள்​ளார். அரசுப்​பணி என்​பது அரசின் கருணை உதவி அல்ல. அது இந்​திய அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின்​கீழ் அனைத்து தகு​தி​யான குடிமக்​களுக்​கும் சமவாய்ப்​பின் அடிப்​படை​யில் வழங்கப்பட வேண்​டிய பொது உரிமை​யாகும். அந்த அரசுப் பணியை அரசாணை, சேவை விதி​கள் மற்​றும் வெளிப்​படை​யான கொள்​கை​களின் அடிப்​படை​யில் மட்​டுமே வழங்க முடி​யும்.

கரூர் சம்​பவம் குறித்து விசா​ரணை நடை​பெற்று வரும் நிலை​யில், அச்​சம்​பவத்​தில் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு நிரந்தர அரசுப் பணி வழங்​கி​னால் விசா​ரணை​யில் சிக்​கல் ஏற்​படும். எனவே விசா​ரணை முடி​யும் வரை கரூர் சம்​பவத்​தில் உயி​ரிழந்த குடும்​பங்​களைச் சேர்​நதவர்​களுக்கு அரசுப்​பணி வழங்க தடை விதித்து உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டிருந்​தது.

கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க தடை கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு
மேகேதாட்டு அணை விவகாரம்: தமிழக - கர்நாடக எல்லையில் ஜூலை 15-ம் தேதி போராட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in