“காவிரி டெல்டாவை வறட்சிப் பகுதியாக அறிவிக்கக் கோரி ஆக.28-ல் இ.கம்யூ போராட்டம்” - மு.வீரபாண்டியன்

மு.வீரபாண்டியன்

மு.வீரபாண்டியன்

Updated on
1 min read

சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கக் கோரி, தமிழக அரசை வலியுறுத்தி நாளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி நாளை (28.08.2026) காலை 10.00 மணிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம். டெல்டா மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக நடைபெறுகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும், தேவையான தண்ணீர் காவிரி நதியில் வராத காரணத்தால் குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை. எனவே, விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ 15,000 வீதம் நிவாரணம் வழங்கிட வேண்டும்.

விவசாய வேலைகள் இல்லாததால் விவசாய தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.10,000 நிவாரணமாக வழங்கிட வேண்டும். விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். டெல்டா மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது.

எனவே, அதை போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், எண்ணெய் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

எனவே வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை விலையில்லாமல் வழங்கிடவேண்டும் என்பது முற்றுகைப் போராட்டத்திற்கான கோரிக்கைகள் ஆகும்.

இந்த முற்றுகைப் போராட்டங்களுக்கு அனைத்து பகுதி மக்களும் ஆதரவு தர வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>மு.வீரபாண்டியன்</p></div>
“300 இந்தியர்கள் உட்பட சுமார் 1000 பேரை காணவில்லை” - நேபாள வெளியுறவு அமைச்சர் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in