மேகேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு: தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

மேகேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு: தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

தஞ்சாவூர்: ‘காவிரியின் குறுக்கே கர்நாடக அரசின் மேகேதாட்டு அணை கட்டுவதை அனுமதிக்காதே’ என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் தெற்கு மாவட்டக்குழு சார்பில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கோ. சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர ராமச்சந்திரன், மாநில பொருளாளர் பாஸ்கர், மாநில குழு நிர்வாகி சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில்,காவிரியின் குறுக்கே கர்நாடக அரசின் மேகேதாட்டு அணை கட்டுவதை அனுமதிக்க கூடாது.

மேகேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக தமிழகத்தின் உரிமையை பறிக்கின்ற வகையில் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சரை வன்மையாக கண்டிக்கிறோம்.

உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பிரச்சினையின் பின்புலம்:

கர்​நாடக அரசு காவிரி ஆற்​றின் குறுக்​கே, மேகேதாட்டுவில் ரூ.9 ஆயிரம் கோடி செல​வில் 67.14 டிஎம்சி கொள்​ளளவுக் கொண்ட புதிய அணை​யைக் கட்ட முடி​வெடுத்​துள்​ளது. இதை தமிழக அரசு எதிர்த்து வரும் நிலையில், கர்​நாடக அரசு கடந்த 2018-ம் ஆண்டு முதல்​கட்ட திட்ட வரைவு அறிக்​கையை மத்​திய அரசிடம் சமர்ப்பித்​தது.

அதை பரிசீலித்த மத்​திய நீர்வள ஆணை​யம், விரி​வான திட்ட அறிக்​கை​யைத் தாக்​கல் செய்​யு​மாறு உத்​தரவிட்டது. அதன்​படி கடந்த 2019-ம் ஆண்டு விரி​வான திட்ட அறிக்கை தாக்​கல் செய்​யப்​பட்​டது. அதில் கூறப்​பட்ட தகவல்​கள் காவிரி நடு​வர் மன்​றத்​தின் தீர்ப்​புக்கு முரணாக இருந்​த​தால், அதை திருத்தி வழங்​கு​மாறு மத்​திய நீர்வள ஆணை​யம் மீண்​டும் உத்​தர​விட்​டது.

இதையடுத்​து, கர்​நாடக அரசு கடந்த ஏப்​ரல் மாதம் திருத்​தப்​பட்ட விரி​வான திட்ட அறிக்​கையை மத்​திய நீர்வள ஆணை​யத்​திடம் சமர்ப்​பித்​தது. ஆனால், கர்​நாடக அரசின் விரி​வான திட்ட அறிக்கை ஏற்​கப்​பட​வில்​லை என மத்​திய நீர்வள ஆணை​யம் தெரி​வித்​தது.

காவிரியில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேகேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு: தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 6 பேருக்கு முக்கியப் பொறுப்பு: தவெக வட்டாரம் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in