தமிழகத்துக்கு உரிய நிதியை விடுவிக்க மத்திய அரசை வலியுறுத்தி ஜூன் 29-ல் ஆர்ப்பாட்டம்: மு.வீரபாண்டியன் தகவல்

மு.வீரபாண்டியன்

மு.வீரபாண்டியன்

Updated on
1 min read

மயிலாடுதுறை: தமிழகத்​துக்கு வழங்க வேண்​டிய நிதியை மத்​திய அரசு விடுவிக்கக் கோரி ஜூன் 29-ம் தேதி இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் தெரி​வித்​துள்​ளார்.

மயி​லாடு​துறை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: பெண்​கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்​கொடுமையை தடுக்க அரசு கடும் நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும். அதில் சமரசம் கூடாது. சிங்​கப்​பெண் படை​யில் கூடு​தல் காவலர்​களை நியமிக்க வேண்​டும். தமிழகத்​தில் ஹைட்ரோ கார்​பன் திட்​டத்​துக்கு தமிழக அரசு அனு​மதி அளிக்​கக் கூடாது. நீரும், நில​மும், கடலும் அடுத்​தடுத்த தலை​முறைக்கு பாது​காத்​துத் தர வேண்​டிய கடமை நமக்கு உள்​ளது.

கர்​நாட​கா​வில் மேகே​தாட்டு அணை கட்​டப்​படக் கூடாது. முந்​தைய அரசின் நிலை​தொடரும் என தமிழக முதல்​வர் தெரி​வித்​துள்​ளார். இது வெறும் அணை மட்​டும் கிடை​யாது. 2 மாநிலங்​களின் உறவும், உயிரும் சம்​பந்​தப்​பட்ட பிரச்​சினை. எவ்​வளவு அணைப்போட்​டாலும் காவிரித் தாய் தமிழகம் நோக்கி ஓடிவருவார்.

விவ​சா​யிகள் பயிர்க் கடன்​களை தமிழக அரசு முற்​றி​லும் தள்​ளு​படி செய்ய வேண்​டும். அதற்கு மத்​திய அரசு உதவ வேண்​டும். தமிழகத்​துக்கு வழங்க வேண்​டிய அனைத்து நிதி​யை​யும் மத்​திய அரசு உடனே வழங்க வலி​யுறுத்​தி, ஜூன் 29-ம் தேதி கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் தமிழகம் முழு​வதும் ஆர்ப்​பாட்​டம் நடை​பெற உள்​ளது. இவ்​வாறு கூறினார்.

<div class="paragraphs"><p>மு.வீரபாண்டியன்</p></div>
சட்டவிரோதமாக மண் அள்ளிய டிராக்டர் பறிமுதலின்போது தேவிப்பட்டினம் தலைமை காவலர் விபத்தில் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in