பிளாஸ்டிக் பைகளில் உணவு: கருவில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பா? - அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: பிளாஸ்​டிக் கவர்​களில் சூடான டீ, காபி, சாம்​பார் போன்​றவற்றை வாங்கி பயன்​படுத்​து​வ​தால், கரு​வில் இருக்​கும் குழந்​தைக்​கும் பாதிப்பு ஏற்​படு​மா என்​பது குறித்து மத்​திய, மாநில அரசுகள் விரி​வாக ஆய்வு செய்து அறிக்கை தாக்​கல் செய்ய உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வனம் மற்​றும் சுற்​றுச்​சூழல் பாது​காப்பு தொடர்​பான வழக்​கு​களை விசா​ரிக்​கும் நீதிப​தி​கள் என்.சதீஷ்கு​மார், டி.பரதசக்​ர​வர்த்தி ஆகியோர் அடங்​கிய சிறப்பு அமர்​வில், பிளாஸ்​டிக் கவர்​களில் சூடான டீ, காபி, சாம்​பார் போன்​றவற்றை வாங்கி பயன்​படுத்​து​வ​தால், பிளாஸ்​டிக் கவர் தயாரிப்​புக்கு பயன்​படும் ‘பிஸ்​பி​னால்​-ஏ’ எனும் மைக்ரோ பிளாஸ்​டிக் வேதித் துகள்​கள் கர்ப்​பிணி​யின் நஞ்​சுக்​கொடி வழி​யாக கருப்​பைக்​குள் சென்று கரு​வில் இருக்​கும் குழந்​தைகளுக்​கும் பாதிப்​பு​களை ஏற்​படுத்​து​வ​தாக தனி​யார் பல்​கலைக்​கழகம் மேற்​கொண்ட ஆய்​வறிக்கை சமர்ப்​பிக்​கப்​பட்​டது.

அதையடுத்​து மனிதர்​கள், விலங்​கு​கள் மற்​றும் தாவரங்​களுக்கு 'மைக்ரோ பிளாஸ்​டிக்’ தாக்​கம் உள்​ளதா என்​பது குறித்து மத்​திய சுகா​தா​ரம் மற்​றும் குடும்பநலத்​துறை அமைச்​சகம், சுற்​றுச்​சூழல், வனம் மற்​றும் காலநிலை மாற்​றத்​துக்​கான அமைச்​சகம், தமிழக அரசின் சுகா​தா​ரத்​துறைச் செயலர், உணவு பாது​காப்பு மற்​றும் மருந்து நிர்​வாகத் ​துறை ஆணை​யர் உள்​ளிட்​டோர் அறிக்கை தாக்​கல் செய்ய நீதிப​தி​கள் ஏற்​கெனவே உத்​தர​விட்டனர்.

இந்​நிலை​யில் இந்த வழக்கு அதே அமர்​வில் மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது தமிழக அரசின் கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் ஜெ.ரவீந்​திரன், வனத்​துறை சிறப்பு அரசு வழக்​கறிஞர் டி. சீனி​வாசன் ஆகியோர்,‘‘மைக்ரோ பிளாஸ்​டிக்​கால் மனித ஆரோக்​கி​யத்​துக்கு பாதகம் உள்​ளதா என்​பதை ஆராய சென்னை ஐஐடி உதவியை நாடி​யுள்​ளோம்’’ என்றனர்.

அதே​போல மத்​திய அரசு தரப்​பிலும் ஆய்​வு செய்து அறிக்கை தாக்​கல் செய்ய அவகாசம் அளிக்க கோரப்​பட்​டது. அப்​போது நீதிப​தி​கள், '‘சூடான டீ, காபி, சாம்​பார் போன்​றவற்றை பிளாஸ்​டிக் கவர்​களில் வாங்கி பயன்​படுத்​தும்​போது, அவற்​றால் மனித ஆரோக்​கி​யத்​துக்​கும், கர்ப்​பிணி​களுக்​கும் தீங்கு ஏற்​படு​கிறதா என்​பது குறித்து மத்​திய, மாநில அரசுகள்விரிவான ஆய்பு மேற்கொண்டு அறிக்கை தாக்​கல்​ செய்​ய வேண்​டும்​’’ என உத்​தர​விட்​டனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
“பாஜக + அதிமுக... மிரட்டல், உருட்டலால் உருவான பிளாக்மெயில் கூட்டணி!” - முதல்வர் ஸ்டாலின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in