

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
மதுரை: மதுரையைச் சேர்ந்த ராகுல் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான பள்ளிகள், விடுதிகள் சாதியபெயர்களுடனேயே இயங்குகின்றன. இந்த சாதிய பெயர்கள் நீக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, பூர்ணிமா அமர்வு, வழக்கு தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலர், ஆதிதிராவிட நலத்துறை இயக்குநர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு,வழக்கை வரும் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.