எம்எல்ஏ-வாக பணிபுரிய அனுமதி கோரி மனு தாக்கல் செய்தால் ஏற்க முடியாது: இசக்கி சுப்பையா தரப்புக்கு கோர்ட் திட்டவட்டம்

அதிமுக கொறடா வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு
எம்எல்ஏ-வாக பணிபுரிய அனுமதி கோரி மனு தாக்கல் செய்தால் ஏற்க முடியாது: இசக்கி சுப்பையா தரப்புக்கு கோர்ட் திட்டவட்டம்
Updated on
2 min read

சென்னை: அ​தி​முக கொறடா தொடர்ந்​துள்ள வழக்​கில் தீர்ப்​பளிக்​கும் வரை அம்​பாச​முத்​திரம் எம்​எல்​ஏ-​வாக தொடர்ந்து பணிபுரிய அனு​ம​திக்​கக் கோரி பேர​வைத் தலை​வரிடம் மனு அளித்​துள்​ள​தாக இசக்கி சுப்​பையா தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் தெரிவிக்​கப்​பட்​டது. இதுதொடர்​பாக அவர் தரப்​பில் தாக்​கல் செய்​யப்​படும் கூடு​தல் மனுவை விசா​ரணைக்கு ஏற்க முடி​யாது என தெரி​வித்த நீதிப​தி​கள், அதி​முக கொறடா தொடர்ந்த வழக்​கின் தீர்ப்பை தேதி குறிப்​பி​டா​மல் தள்​ளி​வைத்​துள்​ளனர்.

அதி​முக எம்​எல்​ஏக்​கள் 6 பேரி்ன் ராஜி​னா​மாவை பேர​வைத் தலை​வர் ஏற்​றுக் கொண்​டதை எதிர்த்​து, அக்​கட்​சி​யின் கொறடா அக்ரி கிருஷ்ண​மூர்த்தி மற்​றும் தேசிய மக்​கள் சக்தி கட்​சி​யின் எம்.எல்​.ரவி ஆகியோர் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் தொடரப்​பட்​டன. இந்த வழக்​கு​கள் தலைமை நீதிபதி எஸ்​.ஏ. தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தன.

அப்​போது அதி​முக கொறடா தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர்​கள் கிரி, எஸ்​.ஆர்​.​ராஜகோ​பாலன் ஆகியோர், “இந்த விவ​காரத்தில் சம்​பந்​தப்​பட்ட 6 பேரிடமும் விசா​ரணை நடத்தி அதில் திருப்​தியடைந்த பிறகே அவர்களின் ராஜி​னாமா கடிதங்​களை ஏற்​ற​தாக பேர​வைத் தலை​வர் தெரி​வித்​துள்​ளார். ராஜினாமா செய்த சில மணித்​துளி​களில் அவர்​கள் தவெக​வில் இணைந்​துள்​ளனர்” என வாதிட்​டனர்.

பேர​வைத் தலை​வர் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் சி.எஸ்​.​வைத்​ய​நாதன், “ராஜி​னாமா கடிதங்​களை பேர​வைத் தலை​வர் ஏற்​றுக்​கொண்​ட​தால் மட்​டுமே தகுதி நீக்க நடவடிக்கை இல்​லாமல் போய்​வி​டாது. ஒரு எம்​எல்ஏ தனது பதவியை ராஜி​னாமா செய்​கிறேன் என தனது சுய​விருப்​பத்​தின் பேரில் அளிக்​கப்​படும் கடிதத்தை ஏற்க வேண்​டியது பேர​வைத் தலை​வரின் கடமை. எம்​எல்​ஏ-க்​கள் பதவி, பணத்​துக்​காக ராஜி​னாமா செய்​தார்​களா என்​ப​தை​யும், குதிரை பேரம் நடந்​துள்​ளதா என்​ப​தை​யும் தகுதி நீக்​கம் செய்​யக்​கோரும் மனு மீதான விசா​ரணை​யின்​போது​தான் ஆராய முடி​யும்” என வாதிட்​டார்.

ராஜி​னாமா செய்த 6 எம்​எல்​ஏ-க்​கள் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர்​கள் சதீஷ் பராசரன், மேனகா குரு​சாமி ஆகியோர், எம்​எல்​ஏ-​வாக பதவி​யில் இருந்து சலுகைகளை அனுப​வித்​துக் கொண்​டு, மாற்றுக் கட்​சிக்கு ஆதர​வளித்​தால் அதுதான் ஊழல் நடவடிக்​கை. எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்துவிட்டு வேறு கட்​சிக்கு இணைவது ஜனநாயகத்​தில் நடை​முறை​யில் இருப்​பது​தான். எம்​எல்​ஏ-க்​களின் ராஜி​னா​மாவுக்​கும், தகுதி நீக்​கம் செய்​யக்​கோரும் மனுவுக்​கும் எந்த சம்​பந்​த​மும் இல்​லை” என்​றனர்.

சட்​டப்​பேர​வைச் செயலர் தரப்​பில் ஆஜரான அரசு தலைமை வழக்​கறிஞர் விஜய் நாராயண், எம்​எல்​ஏ-க்​கள் சுய விருப்​பத்​தின் பேரில் அளிக்​கப்​பட்ட பதவி வில​கல் கடிதத்தை பேர​வைத் தலை​வர் ஏற்​காமல் இருக்க முடி​யாது, என்​றார். அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள் இந்த வழக்​கு​களின் தீர்ப்பை தேதி குறிப்​பி​டா​மல் தள்ளி வைத்​தனர்.

எம்​எல்​ஏ-​வாக நீடிக்க விருப்பம்: இந்த வழக்கு விசா​ரணை​யின்​போது அம்​பாச​முத்​திரம் எம்​எல்​ஏ-​வாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட இசக்கி சுப்​பையா தரப்​பி்ல், தனது ராஜி​னா​மாவை திரும்​பப் பெற்​றுக்​கொள்​வ​தாக​வும், வழக்​கி்ல் இறு​தித் தீர்ப்பு வரும் வரை அம்​பாச​முத்​திரம் எம்​எல்​ஏ-​வாக பணி​யில் நீடிக்க அனு​ம​திக்க வேண்​டும் என கோரி சட்​டப்​பேர​வைத் தலை​வரிடம் கடந்த ஆக.28-ம் தேதி மனு அளித்​துள்​ள​தாக​வும், இதுதொடர்​பாக உயர் நீதி​மன்​றத்​தில் கூடு​தல் மனு தாக்​கல் செய்​ய​வுள்​ள​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டது. அந்த மனுவை வி​சா​ரணைக்கு ஏற்க முடி​யாது என நீதிப​தி​கள்​ திட்​ட​வட்​ட​மாக மறுப்​பு தெரி​வித்​து தீர்ப்​பை தள்​ளிவைத்​துள்​ளனர்​.

எம்எல்ஏ-வாக பணிபுரிய அனுமதி கோரி மனு தாக்கல் செய்தால் ஏற்க முடியாது: இசக்கி சுப்பையா தரப்புக்கு கோர்ட் திட்டவட்டம்
கேமரா இல்லாத போன்களுக்கு கோயில்களில் அனுமதி: அமைச்சர் ரமேஷ் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in