உயிரிழந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு தராதது ஏன்?- தமிழக அரசு இன்று விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

உயிரிழந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு தராதது ஏன்?- தமிழக அரசு இன்று விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: ​விருதுநகர் பட்​டாசு ஆலை விபத்​தில் உயி​ரிழந்​தவர்​கள் குடும்​பத்​துக்கு இழப்பீடு வழங்​காதது குறித்து அரசிடம் விளக்​கம் பெற்று இன்று தெரிவிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

விருதுநகர் மாவட்​டம் கட்​ட​னார்​பட்​டி​யில் பட்​டாசு ஆலை​யில் ஏற்​பட்ட வெடி விபத்​தில் 25 பேர் உயி​ரிழந்தது தொடர்​பாக உயர் நீதி​மன்​றம் தாமாக முன் வந்து விசா​ரணை நடத்தி உரிய உத்​தர​வு​களை பிறப்​பிக்க வேண்டும் என உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்​வில் வழக்​கறிஞர் ஆர்​.கருணாநிதி நேற்று முறை​யீடு செய்​தார்.

அப்​போது நீதிப​தி​களிடம், இதே​போன்ற பட்​டாசு ஆலை விபத்து தொடர்​பான வழக்கு ஒன்​றில், உயி​ரிழந்​தவர்​களுக்கு ரூ.10 லட்​சம் வரை இழப்​பீடு தரவேண்​டும். உயி​ரிழந்​தவர்​களின் குழந்​தைகளுக்கு இலவச கல்​வி உள்ளிட்ட வழி​காட்​டு​தலை தனி நீதிபதி பிறப்​பித்​துள்​ளார்.

இந்த உத்​தரவை எதிர்த்து அரசு தரப்​பில் மேல்​முறை​யீடு மனு தாக்​கல் செய்​யப்​பட்டு நிலு​வை​யில் உள்​ளது. இந்​நிலை​யில் கட்​ட​னார்​பட்​டி​யில் பட்​டாசு ஆலை​யில் மீண்​டும் விபத்து நடந்து 25 பேர் இறந்​துள்​ளனர்.

தேர்​தல் காலம் என்​ப​தால் விபத்து பகுதிக்கு அதி​காரி​கள் செல்​ல​வில்​லை. இறந்​தவர்​கள் குடும்​பங்​களுக்​கும், காயமடைந்​தவர்​களுக்​கும் இழப்பீடு வழங்​க​வில்​லை.

எனவே நிலு​வை​யில் உள்ள வழக்கை விசா​ரணைக்கு எடுத்து உரிய உத்​தரவு பிறப்பிக்க வேண்​டும் என்றார்.

பின்​னர் நீதிப​தி​கள், இது தொடர்​பாக நிலு​வை​யில் உள்ள வழக்​கில் அரசு தரப்​பில் பதிலளிக்க நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

சரி​யான வழி​காட்​டுதல்​கள் தேவை, இது​வரை ஏன் இழப்​பீடு வழங்​கப்​பட​வில்​லை எனக் கேள்வி எழுப்​பினர்.

அதற்கு அரசு தரப்பில், அரசிடம் விளக்​கம் பெற்று தெரிவிக்க அவகாசம் கோரப்பட்​டது.

பின்​னர் நீதிப​தி​கள், இழப்​பீடு குறித்து அரசிடம் உரிய விளக்​கம் பெற்று தெரிவிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை இன்​றைக்கு தள்​ளி​வைத்​தனர்.

உயிரிழந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு தராதது ஏன்?- தமிழக அரசு இன்று விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
இலங்கையிலுள்ள சீதை அம்மன் கோயிலில் இந்திய குடியரசு துணைத் தலைவர் வழிபாடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in