சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய சுபாஷ் சந்திர கபூரை ஜெர்மனிக்கு திருப்பி அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

உயர் நீதிமன்றம், மதுரை.
உயர் நீதிமன்றம், மதுரை.
Updated on
1 min read

மதுரை: சிலை கடத்​தல் வழக்​கில் கைதான சுபாஷ் சந்​திர கபூரை ஜெர்​மனிக்கு அனுப்ப உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

அரியலுார் மாவட்​டம் உடை​யார்​பாளை​யம் அருகே சுத்தமல்லி வரத​ராஜப் பெரு​மாள் கோயி​லில் தொன்​மை​யான சிலைகள் திருட்டு மற்​றும் கடத்​தல் வழக்​கில் சர்​வ​தேச சிலைக் கடத்​தல் மன்​னன் சுபாஷ் சந்​திரகபூருக்கு 10 ஆண்​டு​கள் சிறைத் தண்​டனை விதித்து கும்​ப கோணம் கூடு​தல் தலை​மைக் குற்​ற​வியல் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில் சுபாஷ் சந்​திரகபூர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: நான் 2011 முதல் சிறை​யில் உள்ளேன். தண்​டனை காலம் 2022 அக்​.31-ல் முடிவடைந்​தது. அதை​யும் தாண்டி என்னை சட்​ட​விரோத​மாக காவலில் வைத்​துள்​ளனர். மேலும் 6 வழக்​கு​களை நடத்த என்னை முறைப்​படி இந்​திய அரசிடம் ஒப்​படைக்க ஜெர்​மன் அரசிடம் போலீ​ஸார் அனு​மதி கோரினர்.

அதில் ஜெர்​மன் அரசு முடி​வெடுக்​காத​தால் நிலு​வை​யில் உள்​ளது. என்​னைச் சிறையி​லிருந்து விடு​வித்து ஜெர்​மனிக்கே அனுப்ப மத்​திய,மாநில உள்​துறை செயலர்​களுக்கு உத்​தர​விட வேண்​டும் எனக் குறிப்​பிட்​டிருந்​தார். இந்த மனுவை நீதிப​தி​கள் ஏ.டி.ஜெகதீஷ்சந்​தி​ரா, என்​.குணசேகரன் அமர்வு விசா​ரித்​து, மனு​தா​ரரை 2 வாரங்​களில் ஜெர்​மனிக்கு அனுப்​பிவைக்க மத்​திய உள்​துறைச் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என உத்​தர​விட்​டது.

உயர் நீதிமன்றம், மதுரை.
தேசிய பொதுப் போக்குவரத்து அட்டைத் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in