தேசிய பொதுப் போக்குவரத்து அட்டைத் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு

தேசிய பொதுப் போக்குவரத்து அட்டைத் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: தமி​ழ​கம் முழு​வதும் தேசிய பொதுப் போக்​கு​வரத்து அட்​டைத் திட்​டம் விரி​வுபடுத்​தப்​படும் என போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் விஜய் தமி​ழன் பார்த்​திபன் அறி​வித்​துள்​ளார்.

சட்​டப்​பேர​வை​யில் நேற்று புதிய அறி​விப்​பு​களை வெளி​யிட்டு போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் விஜய் தமி​ழன் பார்த்​திபன் பேசி​ய​தாவது:

அரசு பேருந்து பயணி​களின் பாது​காப்பை உறு​திப்​படுத்​த​வும், பேருந்​து​களின் நிகழ்​நேர கண்​காணிப்பை மேம்​படுத்​த​வும், 13,490 அரசு பேருந்​துகளில் ஜிபிஎஸ் கருவி மற்​றும் அவசர உதவி பொத்​தான்​கள் ரூ.17.99 கோடி செல​வில் பொருத்​தப்​படும்.

மாநகர் போக்​கு​வரத்​துக் கழகத்​தின் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட ஒரு பணிமனை​யில் இயங்​கும் 40 பேருந்​துகளில் எரிபொருள் சென்​சார் மற்​றும் டயர் காற்​றழுத்த கண்​காணிப்பு அமைப்பு முன்​னோடி திட்​ட​மாக ரூ.16.34 லட்​சம் செல​வில் செயல்​படுத்​தப்​படும். மாநகரப் போக்​கு​வரத்​துக் கழகத்​தின் 7 ஆண்​டு​கள் பழமை​யான நல்ல நிலை​யில் உள்ள 100 டீசல் பேருந்​துகள் மின்​சார பேருந்​துகளாக மாற்​றப்​பட்டு இயக்​கப்​படும். அதற்கு தேவை​யான மின்​சா​ரக் கட்​டமைப்பு வசதி​கள் ரூ.13.60 கோடி​யில் ஏற்​படுத்​தப்​படும்.

போக்​கு​வரத்து கழகங்​களில் பணி​யாற்​றும் தலா 8 ஓட்​டுநர்​கள், நடத்​துநர்​கள் என 16 பேர் ஆண்​டு​தோறும் தேர்வு செய்​யப்​பட்​டு, தலா ரூ.50 ஆயிரம் ரொக்​கப் பரிசு, விருது வழங்​கும் திட்​டம் ரூ.10 லட்​சத்​தில் செயல்​படுத்​தப்​படும்.

தமி​ழ​கம் முழு​வதும் பயணி​களின் எளி​தான, விரை​வான மற்​றும் பாது​காப்​பான கட்டண பரி​வர்த்​தனை வசதியை ஏற்​படுத்த, தற்​போது சென்னை மாநகர் போக்​கு​வரத்து கழகத்​தில் நடை​முறை​யில் உள்ள ‘சிங்​கார சென்​னை’ தேசிய பொதுப் போக்​கு​வரத்து அட்​டைத் திட்​டம் விரி​வுபடுத்​தப்​படும்.

சென்னை மந்​தைவெளி​யில் புதிய வட்​டாரப் போக்​கு​வரத்து அலு​வல​கம் மற்​றும் நாமக்​கல் பரமத்​திவேலூரில் புதிய மோட்​டார் வாகன ஆய்​வாளர் பகுதி அலு​வல​கம் கட்​டப்​படும் என்பன உள்​ளிட்ட 16 அறி​விப்​பு​களை வெளியிட்​டார்​.

தேசிய பொதுப் போக்குவரத்து அட்டைத் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்: கோகுல்தாஸ் ஆணைய அறிக்கை சமர்ப்பிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in