திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் ஏற்றக் கோரி வழக்கு: தர்கா, தொல்லியல் துறை பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் ஏற்றக் கோரி வழக்கு: தர்கா, தொல்லியல் துறை பதில் அளிக்க கோர்ட் உத்தரவு
Updated on
2 min read

மதுரை: ​திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் கார்த்​திகை தீபம் ஏற்​றக் கோரிய வழக்​கில் சிக்​கந்​தர் தர்கா நிர்​வாகம், தொல்​லியல் துறை பதில் அளிக்​கு​மாறு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. திருப்​பரங்​குன்​றம் உச்​சிப் பிள்​ளை​யார் கோயில் தீப மண்​டபத்​தில் கார்த்​திகை தீபம் ஏற்​றும் இந்து அறநிலை​யத் துறை​யின் அறி​விப்பை ரத்து செய்​து, மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்ற உத்​தர​விடக் கோரி எழு​மலை​யைச் சேர்ந்த ராம ரவிக்​கு​மார் என்​பவர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் முன்​னிலை​யில் விசா​ரணைக்கு வந்​தது. மனு​தா​ரர் தரப்​பில், "திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் 6-ம் நூற்​றாண்​டிலிருந்து கார்த்​திகை தீபம் ஏற்​றப்​படு​கிறது. தற்​போது கோயில் நிர்​வாகம் அதற்கு அனு​மதி வழங்க மறுக்​கிறது. மலை உச்​சி​யில் ஏற்​றப்​படும் தீபம் 10 மைல் தொலை​வுக்கு தெரிய வேண்​டும் என்​ப​தற்​காகவே தீபத்​தூண் அமைக்​கப்​பட்​டது. அங்கு தீபம் ஏற்​றாமல், மோட்ச தீபம் ஏற்​றும் இடத்​தின் அருகே கார்த்​திகை தீபம் ஏற்​று​வது ஆகம விதி​களுக்கு எதி​ரானது" என்று தெரி​வித்​துள்​ளார்.

இதே​போல, மற்​றொரு மனு​தா​ரர் தரப்​பில் "மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற பிற மதத்​தினர் எதிர்ப்பு தெரிவிக்​க​வில்​லை. அங்கு தீபம் ஏற்​றி​னால் பிரச்​சினை வரும் என்று தமிழக அரசும், அறநிலை​யத் துறை​யும்​தான் தெரிவிக்​கின்​றன" என்று கூறப்​பட்​டுள்​ளது. அரசுத் தரப்​பில், "100 ஆண்​டுகளுக்கு மேலாக வழக்​கத்​தில் இல்​லாத ஒன்றை உரிமை யாககோரு​வது எப்​படி? பக்​தர்கள், பொது​மக்​கள் மத்​தி​யில் பிரச்​சினையை ஏற்​படுத்​தும் வகையில் இந்​தக் கோரிக்கை முன்​வைக்​கப்​படு​கிறது" என்று தெரிவிக்​கப்​பட்​டது.

அப்​போது நீதிப​தி, "மலை மீது தீபம் ஏற்ற அனு​மதி கோரி​யுள்​ளனர்" என்​றார். அதற்கு அரசுத் தரப்​பில், "உச்​சிப் பிள்​ளை​யார் கோயிலும் மலை மீது​ தான் உள்​ளது. பக்​தர்​களிடையே பதற்​றத்தை ஏற்​படுத்​தவே இந்த மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இத்​தனை ஆண்​டு​களாக ஏற்​றப்​பட்ட இடத்​திலேயே கார்த்​திகை தீபம் ஏற்​றலாம்" எனக் கூறப்​பட்​டது.

இதே​போல, மற்​றொரு மனு​தா​ரர் தரப்​பில் "மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற பிற மதத்​தினர் எதிர்ப்பு தெரிவிக்​க​வில்​லை. அங்கு தீபம் ஏற்​றி​னால் பிரச்​சினை வரும் என்று தமிழக அரசும், அறநிலை​யத் துறை​யும்​தான் தெரிவிக்​கின்​றன" என்று கூறப்​பட்​டுள்​ளது. அரசுத் தரப்​பில், "100 ஆண்​டுகளுக்கு மேலாக வழக்​கத்​தில் இல்​லாத ஒன்றை உரிமை யாககோரு​வது எப்​படி? பக்​தர்கள், பொது​மக்​கள் மத்​தி​யில் பிரச்​சினையை ஏற்​படுத்​தும் வகையில் இந்​தக் கோரிக்கை முன்​வைக்​கப்​படு​கிறது" என்று தெரிவிக்​கப்​பட்​டது.

அப்​போது நீதிப​தி, "மலை மீது தீபம் ஏற்ற அனு​மதி கோரி​யுள்​ளனர்" என்​றார். அதற்கு அரசுத் தரப்​பில், "உச்​சிப் பிள்​ளை​யார் கோயிலும் மலை மீது​

தான் உள்​ளது. பக்​தர்​களிடையே பதற்​றத்தை ஏற்​படுத்​தவே இந்த மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இத்​தனை ஆண்​டு​களாக ஏற்​றப்​பட்ட இடத்​திலேயே கார்த்​திகை தீபம் ஏற்​றலாம்" எனக் கூறப்​பட்​டது.

மதுரை மத நல்​லிணக்க கூட்​டமைப்பு சார்​பில் வழக்​கறிஞர் வாஞ்​சி​நாதன் வாதிடும்​போது, "உச்​சிப் பிள்​ளை​யார் கோயில் அருகே கார்த்​திகை விளக்கு ஏற்​று​வது ஆகம விதி​களுக்கு எதி​ரானது என்​ப​தற்கு எந்த ஆதா​ர​மும் இல்​லை.

திருப்​பரங்​குன்​றம் மலை​யில் உச்​சிப் பிள்​ளை​யார் கோயில், தீபத்​தூண், குதிரைச்​சுனை ஆகிய இடங்​களில் எந்த இடத்​தில் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என்ற உரிமையை நிலை​நாட்ட உரிமை​யியல் நீதி​மன்​றத்தை அணுக வேண்​டும்.

திருப்​பரங்​குன்​றம் மலை​யில் எந்த நடவடிக்கை மேற்​கொள்​வ​தாக இருந்​தா​லும் தொல்​லியல் துறை​யிடம் அனு​மதி பெற வேண்​டும் என்ற உத்​தர​வும் உள்​ளது. அதன்​படி, கார்த்​திகை தீபம் ஏற்ற தொல்​லியல் துறை​யிட​மும் முறை​யான அனு​மதி பெற வேண்​டும்" என வாதிடப்​பட்​டது.

பின்​னர் நீதிப​தி, இந்த வழக்​கில் திருப்​பரங்​குன்​றம் மலை​யில் உள்ள சிக்​கந்​தர் தர்கா தரப்​பை​யும், மத்​திய தொல்​லியல் துறையை​யும் எதிர்​மனு​தா​ரர்​களாக சேர்த்​து, இரு தரப்​பிலும் பதில் மனு தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டு, வி​சா​ரணை​யை வரும்​ 24-ம்​ தேதிக்​கு தள்​ளிவைத்​தார்​.

நீதிபதி திடீர் ஆய்வு: இதற்கிடையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று மாலை திடீரென திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். மலை உச்சி வரை சென்ற அவர், உச்சியில் உள்ள தீபத்தூணையும், உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தற்போது கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தையும் பார்வையிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in