புத்தகக் கொள்முதல் ஊழல்: அகல் விளக்கு பதிப்பக வங்கி கணக்குகளை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிய அறிவுறுத்தல்
Santhanakoodu Festival

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

Updated on: 
2 min read

மதுரை: தமிழகத்​தில் பொது நூல​கங்​களுக்​கான புத்​தகக் கொள்​முதல் ஊழல் தொடர்​பாக லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் வழக்​குப் பதி​ய​வும், அகல்​விளக்கு பதிப்​பகத்​தின் வங்கி கணக்​கு​களை முடக்​கவும் உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டது.

நெல்லை கிருஷ்ணாபுரத்​தைச் சேர்ந்த ராமசுப்பு, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: நூல​கங்​களுக்கு புத்​தகம் கொள்​முதல் தொடர்​பாக உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு 2024-ல் பல கட்​டுப்​பாடுகளை விதித்து உத்​தர​விட்​டது. இந்த உத்​தரவு அமல்​படுத்​தப்​பட​வில்லை.

இந்​நிலை​யில் தமிழகத்​தில் நூல​கங்​களுக்கு புத்​தகம் கொள்​முதல் செய்​ததில் மிகப்​பெரியளவில் முறைகேடு நடந்​திருப்​பது வெளிச்​சத்​துக்கு வந்​துள்​ளது. இந்த முறைகேடு பெரியார் அறி​வுல​கத்​துக்​கான 2026-ம் ஆண்​டின் கொள்​முதல் உத்​தரவு​களு​டன் மட்​டும் இல்​லாமல் மதுரையில் உள்ள கலைஞர் நூற்​றாண்டு நூல​கம் வரை நீள்​கிறது. பல ஆண்​டுகளாக முறைகேடு நடை​பெற்று வரு​கிறது.

தவறிழைத்த அதி​காரி​கள் மற்​றும் மோசடி பதிப்​பாளர்​கள் மீது குற்​றவியல் நட​வடிக்கை எடுக்க சிபிஐ அல்​லது சிபி​சிஐடி விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனுவில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிப​தி​கள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. பொது நூல​கத்​துறை இயக்​குநர் ஷஜீவனா காணொளி​யில் ஆஜரானார். அவரிடம் நீதிப​தி​கள், ’ 2024-ம் ஆண்​டின் உயர் நீதி​மன்ற உத்​தரவை படித்​தீர்​களா? புத்​தகம் எப்​படி கொள்​முதல் செய்​யப்​படு​கிறது’ என கேள்வி எழுப்​பினர்.

அதற்கு ஷஜீவனா, ‘நான் இன்று (நேற்று) காலை​யில்​தான் பொறுப்​பெற்​றேன். தற்​போது வெளிச்​சத்​துக்கு வந்​துள்ள புத்​தக கொள்​முதல் முறைகேடு தொடர்​பாக அரசும், லஞ்ச ஒழிப்பு போலீ​ஸாரும் விசா​ரித்து வரு​கின்​றனர். தொடர்ந்து நட​வடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது’ என்​றார்.

தொடர்ந்து நீதிப​தி​கள், ‘கொள்​முதல் செய்​யப்​படும் புத்​தகங்​களை பரிந்​துரைப்​பது யார்? புத்​தகங்​களை அங்​கீகரிப்​பது யார்? கொள்​முதல் உத்​தரவு​களில் கையெழுத்​திட்ட அதி​காரி​கள் யார்? என்ற விபரங்​களை நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்ய வேண்​டும். இந்த விவகாரம் தீவிர​மானது. தீவிரம் கருதியே பொது நூல​கத்​துறை இயக்​குநர் ஆஜராக உத்​தர​விடப்​பட்​டது. அதி​காரி​களைக் காப்​பாற்ற முயற்​சிக்​கக் கூடாது’ என்​றனர்.

அரசு வழக்​கறிஞர் வாதிடுகை​யில், ‘கொள்​முதல் தொடர்​பான அனைத்து விவரங்​களை​யும் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்ய அரசு தயாராக உள்​ளது’ என்​றார்.

அதற்கு நீதிப​தி​கள், ‘முந்​தைய உத்​தர​விலேயே முறைகேட்​டில் ஈடு​படுவோர் மீது வழக்​குப் பதிய உத்​தர​விட்​டுள்​ளது. அப்​படி​யிருக்​கும்​போது ஏன் இது​வரை வழக்​குப் பதி​ய​வில்லை. அடை​யாளம் தெரியாத நபர்​கள் என்று கூறி வழக்​குப் பதிவு செய்​திருக்​கலாமே. அகல் விளக்கு பதிப்​பகம் மற்​றும் அதன் உரிமையாளரின் வங்கி கணக்​கு​களை முடக்​காமல் வைத்​திருப்​பது ஏன்?’ என கேள்வி எழுப்​பினர்.

பின்​னர் நீதிப​தி​கள், ‘2024-ல் உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை அமல்​படுத்​தி​யிருந்​தால் இந்த மோசடியைத் தடுத்​திருக்​கலாம். உயர் நீதி​மன்ற உத்​தரவை அமல்​படுத்​தாமல் அதி​காரி​கள் அவ​மதிப்பு செய்​துள்​ளனர். ஆட்​சிகள்​தான் மாறுகின்​றன. அதி​காரி​கள் அப்​படியேதான் உள்​ளனர். இந்த மோசடியை எழுத்​தாளர் பெரு​மாள் முருகன் வெளிச்​சத்​துக்​குக் கொண்டு வந்​துள்​ளார். பொருளாதார நிபுணர் பெயரில் போலி புத்​தகம் தயாரித்​துள்​ளனர். ஏஐயை பயன்​படுத்தி போலி புத்​தகங்​களை தயாரித்​துள்​ளனர். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்​டும்.

எனவே, இந்த முறைகேடு தொடர்​பாக லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் உடனடி​யாக வழக்​குப் பதிவு செய்ய வேண்​டும். கடந்த 2 ஆண்​டுகளாக நடந்த புத்​தகக் கொள்​முதல் தொடர்​பான அனைத்து விவரங்​களை​யும், கொள்​முதல் செய்த அதி​காரி​களின் பட்​டியலை​யும் அரசு தாக்​கல் செய்ய வேண்​டும். அகல் விளக்கு பதிப்​பகம் மற்​றும் அதன் உரிமையாளரின் வங்​கிக் கணக்​கு​களை உடனே முடக்க வேண்​டும். விசா​ரணை நாளைக்கு (இன்று) ஒத்​திவைக்​கப்​படு​கிறது’ என உத்​தர​விட்​டனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு: புத்தகக் கொள்முதல் முறைகேடு குறித்து 'திமுக சட்டப் பிரிவு இணைச் செயலாளர் இ.பரந்தாமன் தரப்பில் வழக்கறிஞர் ஏ. தாமோதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதை எழுத்தாளர் பெருமாள் முருகன் வெளியே கொண்டு வந்துள்ளார்.

அரசு அமைத்த 112 பேர் கொண்ட குழுவின் பரிந்துரைப்படி சுமார் 60,266 புத்தகங்கள் அறிவுலகத்துக்கு புதிதாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, அகல் விளக்கு பதிப்பகம், ஃபீனிக்ஸ் பதிப்பகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதாக சந்தேகம் எழுகிறது.

இந்த புத்தகங்களை கொள்முதல் செய்ய உத்தரவிட்ட அதிகாரிகள் யார், புத்தகங்கள் முறையாக தேர்வு செய்யப்பட்டதா, ஆசிரியர்களின் அடையாளம் சரிபார்க்கப்பட்டதா, புத்தகங்களின் தரம், எண்ணிக்கை ஆய்வு செய்யப்பட்டதா, பதிப்பகங்களுக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டது, புத்தக விலை நியாயமானதா, த்ரிஷா விஜய், சங்கீதா விஜய், தாமரை பன்னீர், தாமரை முரளி, மோனிகா ரவி என்ற பெயரில் உண்மையிலேயே எழுத்தாளர்கள் உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தக் கோரி லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடம் கடந்த 7-ம் தேதி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, ஊழல் தடுப்புச் சட்டம், பிஎன்எஸ், பிஎன்எஸ்எஸ் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இந்த ஆவணங்கள், கோப்புகளை உடனடியாக கைப்பற்றி பத்திரப்படுத்த லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Santhanakoodu Festival
தவெகவின் 6 மாத கால ஆட்சி எப்படி? - ஒரு விரைவுப் பார்வை

X