அமலாக்கத் துறை நடவடிக்கை கோரியவருக்கு நீதிமன்றம் அபராதம்

அமலாக்கத் துறை நடவடிக்கை கோரியவருக்கு நீதிமன்றம் அபராதம்
Updated on
1 min read

மதுரை: நெல்​லை​யைச் சேர்ந்த ரகமத் அலி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: திருநெல்​வேலி சங்​கர் நகர் பேரூ​ராட்சி முன்​னாள் தலை​வர் பேச்​சிப்​பாண்​டியன், தனது வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்​துள்​ளார்.

இதுகுறித்து நான் அமலாக்கத் துறை மற்​றும் வரு​மானவரித் துறை​யினருக்கு புகார் அனுப்​பினேன். அந்த புகாரின் அடிப்​படை​யில் விசா​ரணை நடத்த உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறி​யிருந்​தார்.

இந்த மனுவை நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், கே.கே.​ராமகிருஷ்ணன் ஆகியோர் விசா​ரித்​து, “இந்த மனு தவறான புரிதலின் அடிப்​படை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளதால், தொடக்க நிலை​யிலேயே தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது.

நீதி​மன்​றத்​தின் நேரத்தை வீணடித்​ததற்​காக மனு​தா​ரருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்​கப்​படு​கிறது. இந்த அபராதத்தை 2 வாரத்​தில் மாநில சட்​டப் பணி​கள் ஆணைக் குழு​வுக்கு மனு​தா​ரர் செலுத்த வேண்​டும்” என்று உத்​தர​விட்​டனர்.

அமலாக்கத் துறை நடவடிக்கை கோரியவருக்கு நீதிமன்றம் அபராதம்
‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என முழங்க பழநியில் தைப்பூச தேரோட்டம் கோலாகலம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in