‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என முழங்க பழநியில் தைப்பூச தேரோட்டம் கோலாகலம்!

லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
பழநி தைப்பூசத் திருவிழாவையொட்டி பெரியநாயகியம்மன் கோயில் அருகே ரத வீதியில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தேர். (உள்படம்) தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி. | படங்கள்: நா.தங்கரத்தினம் |

பழநி தைப்பூசத் திருவிழாவையொட்டி பெரியநாயகியம்மன் கோயில் அருகே ரத வீதியில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தேர். (உள்படம்) தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி. | படங்கள்: நா.தங்கரத்தினம் |

Updated on
2 min read

பழநி: பழநி தைப்​பூசத் திரு​விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான தேரோட்​டம் நேற்று மாலை கோலாகல​மாக நடை​பெற்​றது. ‘வெற்​றிவேல் முரு​க​னுக்கு அரோக​ரா’ என்ற முழக்​கத்​துடன் பக்​தர்​கள் வடம் பிடித்து தேர் இழுத்​தனர்.

பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயி​லின் உபகோயி​லான பெரிய​நாகி​யம்​மன் கோயி​லில் தைப்​பூசத் திரு​விழா ஜன. 26-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. தின​மும் வள்​ளி, தெய்​வானை சமேத முத்​துக்​கு​மார சுவாமி வெள்ளி ஆட்​டுக்​கி​டா, காமதேனு, தந்​தப் பல்​லக்​கு, தங்க மயில் உள்​ளிட்ட வாக​னங்​களில் வீதி​யுலா வந்​து, பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார்.

விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சிகளில் ஒன்​றான திருக்​கல்​யாணம் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்​றது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு வள்​ளி, தெய்​வானை சமேத முத்​துக்​கு​மார சுவாமி மணக்​கோலத்​தில் வெள்​ளித்​தேரில் வீதி உலா வந்​தனர். விழா​வின் முக்​கிய நிகழ்​வான தைப்​பூசத் தேரோட்​டம் நேற்று மாலை கோலாகல​மாக நடை​பெற்​றது.

தைப்​பூசத்தையொட்டி நேற்று அதி​காலை முதலே வெளி மாவட்​டங்​கள், வெளி மாநிலங்​களில் இருந்து லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் பழநி​யில் திரண்​டனர். ஆறு மணி நேரம் வரிசை​யில் காத்​திருந்து பழநி மலைக்​கோயி​லில் பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர்.

தைப்​பூசத் தேரோட்​டத்​தையொட்​டி, பெரிய​நாயகி​யம்​மன் கோயி​லில் காலை 5 மணிக்கு வள்​ளி, தெய்​வானை சமேத முத்​துக்​கு​மார சுவாமி தோளுக்​கினி​யானில் சண்​முகந​திக்கு எழுந்​தருளி தீர்த்​தம் கொடுக்​கும் நிகழ்ச்சி நடை​பெற்​றது. காலை 11.15 மணிக்கு மேல் மேஷ லக்​னத்​தில் சுவாமி தேரில் எழுந்​தருளி​னார். சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்​றும் ஆராதனை​கள் நடை​பெற்​றன.

தொடர்ந்​து, மாலை 4.30 மணிக்கு விநாயகர் மற்​றும் வீர​பாகு சுவாமி தேர் முன்​னால் செல்ல வள்​ளி, தெய்​வானை சமேத முத்​துக்​கு​மார சுவாமி தேரை ‘வெற்​றிவேல் முரு​க​னுக்கு அரோக​ரா’ என்ற முழக்​கத்​துடன் ரத வீதி​களில் திரண்​டிருந்த ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் வடம் பிடித்து இழுத்​தனர். பின்​னர், ரத வீதி​களை சுற்றி வந்த தேர், மாலை 5.45 மணிக்கு நிலையை அடைந்​தது.

விழா​வில், திண்​டுக்​கல் மாவட்ட ஆட்​சி​யர் சரவணன், பழநி எம்​எல்ஏ செந்​தில்​கு​மார், கோயில் இணை ஆணை​யர் மாரி​முத்து, கந்​தவி​லாஸ்​ உரிமை​யாளர்​ செல்​வகு​மார்​, கண்​ப​த்​ கி​ராண்​ட்​ ஹரிஹர​முத்​து, சர​வணப்​ பொய்​கை கந்​தவி​லாஸ்​ உரிமை​யாளர்​ ​பாஸ்​கரன் மற்​றும் அறங்​காவலர்​கள் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

திரு​விழாவையொட்​டி, 3,000 போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். வரும் 4-ம் தேதி இரவு தெப்​பத் திரு​விழா​, கொடி இறக்​குதல் நிகழ்ச்​சிகள் நடை​பெற உள்​ளன.

நெரிசலில் சிக்கி பக்தர்கள் மயக்கம்: உதவிய போலீஸார் - தைப்பூசத்தையொட்டி நேற்று அதிகாலை 2 மணி முதல் பழநி மலைக் கோயிலுக்குச் செல்லும் பாதையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேரம் செல்லச்செல்ல பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்தது.

கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் போலீஸார், அறநிலையத் துறை அதிகாரிகள் திணறினர். கூட்டம் அதிக அளவில் இருந்ததால் மலைப் பாதையில் பக்தர்களை போலீஸார் அணி அணியாகப் பிரித்து அனுப்பினர். இருப்பினும், பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் முந்திச் செல்ல முயன்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

இதன் காரணமாகவும், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததாலும் பக்தர்கள் பலர் மயங்கி விழுந்தனர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், மயங்கி விழுந்தவர்களை மீட்டு தோளில் சுமந்தபடி மருத்துவ முகாமுக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தரிசனத்துக்காக பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க நேரிட்டதால், போதிய குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாமல் பக்​தர்​கள் பலர் சிரமத்​துக்கு உள்​ளாகினர்.

<div class="paragraphs"><p>பழநி தைப்பூசத் திருவிழாவையொட்டி பெரியநாயகியம்மன் கோயில் அருகே ரத வீதியில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தேர். (உள்படம்) தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி. | படங்கள்: நா.தங்கரத்தினம் |</p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 02 பிப்ரவரி 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in