அதிமுக எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க வழக்கு: 2 மாதத்தில் முடிவு எடுக்க பேரவைத் தலைவருக்கு நீதிமன்றம் கெடு

அதிமுக எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க வழக்கு: 2 மாதத்தில் முடிவு எடுக்க பேரவைத் தலைவருக்கு நீதிமன்றம் கெடு
Updated on: 
2 min read

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் தகு​திநீக்க மனுக்​கள் மீது இரு மாதங்​களில் நடவடிக்கை எடுக்க பேர​வைத் தலை​வருக்கு உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது​.

நம்​பிக்கை வாக்​கெடுப்​பின்​போது அதி​முக கொறடா உத்​தரவை மீறி சட்​டப்​பேர​வை​யில் தவெக அரசுக்கு ஆதர​வாக வாக்​களித்​த​தாகக் கூறி அதி​முக எம்​எல்​ஏ-க்​களாக பதவி வகித்த மரகதம் குமரவேல், சத்​தி​ய​பாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்​பை​யா, எம்​.ஆர்.விஜய​பாஸ்​கர், சி.விஜய​பாஸ்​கர் ஆகிய 6 பேர் மீதும் கட்​சித்​தாவல் தடைச்​சட்​டத்தின்​ கீழ் தகு​திநீக்க நடவடிக்கை எடுக்​கக்​கோரி அதி​முக பொதுச் செய​லாளர் பழனி​சாமி பேர​வைத் தலை​வரிடம் கடிதம் அளித்​தார்.

இது நிலு​வை​யில் இருந்த நிலை​யில் 6 பேரது ராஜி​னாமா கடிதங்​களை ஏற்று பேர​வைத் தலை​வர் உத்​தர​விட்​டது சட்​ட​விரோத​ம் என அறி​விக்​கக்​கோரி அதி​முக கொறடா அக்ரி கிருஷ்ண​மூர்த்​தி, தேசிய மக்​கள் சக்திகட்​சித் தலை​வ​ர் எம்​.எல்​.ரவி ஆகியோர் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் தொடர்ந்​திருந்​தனர்.

இந்த வழக்​கு​களை விசா​ரித்த தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்வு நேற்று பிறப்​பித்​துள்ள உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: 6 பேரது ராஜி​னாமா கடிதங்​களை​யும் பேர​வைத் தலை​வர் ஏற்று உத்​தரவு பிறப்​பித்​தது சட்​ட​விரோத​மா​காது. ராஜி​னாமா செய்வது அவர்​களின் தனிப்​பட்ட உரிமை. மாறாக சம்​பந்​தப்​பட்ட எம்​எல்ஏ சுய​விருப்​பத்​தின் பேரில் ராஜி​னாமா செய்​தாரா என்​ப​தைத் ​தான் பேரவைத் தலைவரால் விசா​ரிக்க முடி​யும்.

தகு​திநீக்​கம் செய்​யக்​கோரும் மனு நிலு​வையில் உள்​ள​தால் மட்​டுமே, ராஜி​னா​மாவை பேர​வைத் தலை​வர் ஏற்​றது சட்​ட​விரோதம் எனக்​கூற முடியாது. ராஜி​னா​மா, தகுதி நீக்​கம் தனித்​தனி நடவடிக்​கைகள். எனவே 6 பேரது ராஜி​னாமா கடிதங்​களை​யும் ஏற்​றது அரசி​யலமைப்பு சட்​டரீ​தி​யாகச் செல்​லும்.

கரூர் எம்​.ஆர்.விஜய​பாஸ்​கர் மற்​றும் விராலிமலை சி.​விஜய​பாஸ்​கரை அதிமுக மன்​னித்​து​விட்​ட​து. அதன்​பிறகே அவர்​கள் தவெக​வில் இணைந்​துள்​ளனர்.

அவர்​கள் இரு​வருக்​கும் எதி​ராகஎந்​தவொரு தகுதி நீக்க நடவடிக்​கை​யும் நிலு​வை​யில் இல்​லாத சூழலில் அவர்​களை தகுதி நீக்​கம்​ கோரி தொடரப்​பட்​ட வழக்​கு​களை தள்​ளு​படி செய்​கிறோம். அதே​நேரம் மரகதம் குமர​வேல், சத்​தி​ய​பா​மா, ஜெயக்​கு​மார், இசக்கி சுப்​பையா ஆகியோரை தகுதி நீக்​கம் செய்​யக்​கோரி அளிக்​கப்​பட்​டுள்ள மனு நிலு​வை​யில் உள்​ள​தால் அவர்​கள் மீதான நடவடிக்​கையை பேர​வைத் தலை​வர் இருமாதங்​களில் முடிக்க வேண்​டும். 4 பேரது ராஜி​னா​மாவை பேர​வைத் தலை​வர் ஏற்​றுக் கொண்​டதன் மூலம் அவர்​களுக்கு எதி​ரான தகு​திநீக்க நடவடிக்கை செல்​லாத​தாகி விடாது.

கட்​சித் தாவல் தடைச்​சட்​டத்​தின் கீழ் நடை​பெறும் இந்த விசா​ரணையை சம்​பந்​தப்​பட்ட 4 பேரும் தாமதப்​படுத்​தும் நோக்​கில் செயல்​பட்​டால் அதற்கு பேர​வைத் தலை​வர் அனு​ம​திக்​கக் கூடாது. அதே​போல இரு மாதங்​களில் 4 பேர் மீதான தகுதிநீக்க நடவடிக்​கை​யின் மீது பேர​வைத் தலை​வர் முடிவு எடுக்​காத​பட்​சத்​தில், சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீண்​டும் நீதி​மன்​றத்தை அணுகலாம். இவ்​வாறு உத்​தர​விட்​டனர்.

மேல்முறையீடு: இந்த உத்​தரவை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​ய​வுள்​ள​தாக​வும் 6 பேருமே இந்த விவ​காரத்​தில்​ தப்​ப முடி​யாது என்​றும்​ அதி​முக எம்​பி இன்​பதுரை கூறியுள்​ளார்.

அதிமுக எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க வழக்கு: 2 மாதத்தில் முடிவு எடுக்க பேரவைத் தலைவருக்கு நீதிமன்றம் கெடு
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு: நதிநீர் இணைப்பு பற்றி பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in