தலைமை ஆசிரியைக்கு 14 ஆண்டுகளாக வழங்கப்பட்ட ரூ.8 லட்சம் ஊக்க ஊதியத்தை திருப்பி வசூலிக்க தடை

சென்னை உயர் நீதி​மன்​றம்

சென்னை உயர் நீதி​மன்​றம்

Updated on: 
1 min read

சென்னை: தலைமை ஆசி​ரியைக்கு கடந்த 2012 முதல் வழங்​கப்​பட்டு வந்த ஊக்க ஊதி​யம் மொத்​தம் ரூ.8.34 லட்​சத்தை திருப்​பிச் செலுத்​து​மாறு பள்​ளிக்​கல்வி இயக்​குநர் பிறப்​பித்த உத்​தரவுக்கு உயர் நீதி​மன்​றம் இடைக்​காலத் தடை விதித்​துள்​ளது.

திரு​வாரூர் மாவட்​டம் நீடா​மங்​கலம் தாலுகா பெரம்​பூர் ஊராட்சி ஒன்​றிய தொடக்​கப் பள்ளி தலைமை ஆசி​ரியை எம்.கலா. கடந்த 1996-ல் இடைநிலை ஆசி​ரியையாக பணி​யில் சேர்ந்த இவர், 2007-ல் தலைமை ஆசி​ரியையாகப் பதவி உயர்வு பெற்​றார். தமிழக அரசாணைப்​படி, முதுகலைப் பட்​டம் பெற்ற இவருக்கு கடந்த 2012 டிச.29 முதல் இரட்டை ஊக்க ஊதி​யம் வழங்​கப்​பட்டு வரு​கிறது.

இந்த நிலை​யில், தொலை​தூர பல்​கலைக்​கழகம் மூலம் எம்ஏ பட்​டம் பெற்​றவர்​களுக்கு ஊக்க ஊதிய உயர்வு ரத்து செய்து கடந்த 2013-ல் அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டது. அதன் அடிப்​படை​யில், கலா​வுக்கு வழங்​கப்​பட்ட ரூ.8.34 லட்​சத்தை திருப்பி வசூலிக்க பள்​ளிக்​கல்வி இயக்​குநர் ஆக.14-ம் தேதி உத்​தர​விட்​டார்.

இதை எதிர்த்து உயர் நீதி​மன்​றத்​தில் கலா தொடர்ந்து வழக்கு நீதிபதி மும்​முனேனி சுதீர்​குமார் முன்பு விசா​ரணைக்கு வந்​தது. அரசுத் தரப்​பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, ஊக்க ஊதியத்தை திருப்​பிச் செலுத்​து​மாறு பள்​ளிக் கல்வி இயக்​குநர் பிறப்​பித்த உத்​தரவுக்கு இடைக்​காலத் தடை விதித்த நீதிபதி, விசாரணையை டிச.3-ம் தேதிக்கு தள்​ளிவைத்​தார்.

<div class="paragraphs"><p>சென்னை உயர் நீதி​மன்​றம்</p></div>
புது நம்பிக்கை பிறக்கட்டும்: முதல்வர் விஜய் தீபாவளி வாழ்த்து

X