சென்னை, பாடியில் குழந்தையில்லாத விரக்தியில் சோக முடிவு: மனைவியை கொன்று கணவன் தற்கொலை

மனைவி மாலதி | கணவன் அருண்​குமார்

மனைவி மாலதி | கணவன் அருண்​குமார்

Updated on: 
1 min read

ஆவடி: சென்னை, கொரட்​டூர் அருகே பாடி​யில் மனைவியை கொன்று கணவன் தற்​கொலை செய்து கொண்ட சம்​பவம், பொது​மக்​கள் மத்​தி​யில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

சென்னை, கொரட்​டூர் அருகே உள்ள பாடி, பட​வட்​டம்​மன் கோயில் தெரு​வைச் சேர்ந்​தவர் அருண்​குமார் (41). இவரது மனைவி மாலதி (38). இவர்​களுக்கு திரு​மண​மாகி 14 ஆண்​டுகளாகி​யும் குழந்தை இல்​லாததால், கணவன், மனைவி இரு​வரும் மன உளைச்​சலில் இருந்து வந்த​தாகக் கூறப்​படு​கிறது. இதற்​கிடையே குழந்தை இல்லாததை காரண​மாக காட்டி அருண்​குமார் கடந்த 3 ஆண்டுகளாக எந்த வேலைக்​கும் செல்​லாமல், மது அருந்​தும் பழக்கத்​துக்கு அடிமையாகி​யிருந்​ததால், மாலதி வீட்​டில் தையல் இயந்​திரம் மூலம் துணி தைத்து குடும்​பத்தை காப்​பாற்றி வந்துள்ளார்.

அதே நேரத்​தில், குழந்தை இல்​லாததா​லும், போதிய வருமானமில்லாததா​லும் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தக​ராறு ஏற்​பட்டு வந்​த​தாகக் கூறப்​படு​கிறது. இந்நிலையில் நேற்று காலை நீண்​டநேர​மாகி​யும் அருண்​குமார், மாலதி இரு​வரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததையும், வீடு உள்​பக்​க​மாக பூட்​டி​யிருந்​ததையும் அக்​கம் பக்கத்தினர் அறிந்​தனர்.

இது​குறித்து அவர்​கள் அளித்த தகவலின் பேரில், கொரட்​டூர் போலீஸார் சம்​பவ இடம் விரைந்து, அருண்​குமார் வீட்​டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்​தனர். அப்​போது மாலதி கழுத்​தில் கத்​திக் குத்து காயங்​களு​டன் சடலமாக கிடந்​ததும், அருண்​குமார் தூக்​கிட்​டுத் தற்​கொலை செய்து கொண்​டதும் தெரிய வந்​தது. இதையடுத்து, அருண்​குமார், மாலதி ஆகிய இரு​வரின் உடல்​களை போலீ​ஸார் கைப்​பற்றி பிரேத பரிசோதனைக்​காக சென்னை, கீழ்ப்​பாக்​கம் மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பிவைத்​தனர். மேலும், வீட்​டில் மாலதி எழுதி வைத்​திருந்த கடிதத்தை போலீ​ஸார் கைப்​பற்​றினர்.

அதில் மாலதி, “குழந்தை இல்​லாததா​லும், போதிய வரு​மானம் இல்லாததா​லும் எங்​களுக்கு வாழப் பிடிக்​க​வில்லை. இத​னால் கணவர் அருண்​குமார், என்​னைக் கொலை செய்து விட்டு, அவர் தற்​கொலை செய்து கொள்ள இருக்​கிறார். எங்​கள் உயி​ரிழப்​புக்கு யாரும் காரணம் இல்லை” என குறிப்​பிட்​டுள்​ளார். இது​குறித்து, கொரட்​டூர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து மாலதி கொலை, அருண்குமார் தற்​கொலைக்​கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>மனைவி மாலதி | கணவன் அருண்​குமார்</p></div>
“ஆண்டுதோறும் 50 ராக்கெட் ஏவுவதற்கு இலக்கு”- இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in