

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஏப்.23ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற ஏதுவாக சிறப்பு வாகனச் சேவை வழங்கப்பட உள்ளது.
பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர் Saksham இந்த வசதியைப் செயலி மூலமாகவும், மாவட்ட தகவல் மையத் தொடர்பு எண் 1950 அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகக் கட்டுபாட்டு அறை எண் 1800 4257012, மாற்றுத் திறனாளி நல அலுவலர் (சென்னை வடக்கு) பி.சரவணகுமார் செல்போன் எண் 94439 68097, மாற்றுத் திறனாளி நல அலுவலர் (சென்னை தெற்கு) சீனிவாசன் செல்போன் எண் 98416 96693 ஆகிய எண்களை தொடர்பு கொண்டும் பயன்பெற்றுக் கொள்ளலாம்.