உரிமம் பெறாத வளர்ப்பு நாய்களை கண்டுபிடிக்க வீடு வீடாக மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு

சென்னை மாநகராட்சிப் பகுதியில் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறும் அவகாசம் கடந்த 14-ம் தேதி முடிவடைந்தது. கொளத்தூர் பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று, நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளதா என்று நவீன கருவி மூலம் சோதனை செய்தனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை மாநகராட்சிப் பகுதியில் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறும் அவகாசம் கடந்த 14-ம் தேதி முடிவடைந்தது. கொளத்தூர் பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று, நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளதா என்று நவீன கருவி மூலம் சோதனை செய்தனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

Updated on
1 min read

சென்னை: ​மாநக​ராட்சி பகு​தி​யில் உரிமம் பெறாத வளர்ப்பு நாய்​களை கண்​டு​ பிடிக்க மாநக​ராட்சி அலு​வலர்​கள் வீடு வீடாக ஆய்வு செய்​யத் தொடங்​கி​யுள்​ளனர். போதிய பாது​காப்பு அளிக்​காத​தால் ஆய்​வுக்கு செல்​லும் அலு​வலர்​கள், வீட்டு உரிமை​யாளர்​களால் விரட்​டப்​படும் நிலை ஏற்​பட்டு வரு​கிறது.

சென்னை மாநகரில் பொது​மக்​கள், குழந்​தைகளுக்கு வளர்ப்பு நாய்​கள் அச்​சத்தை ஏற்​படுத்தி வரு​கின்​றன. மூர்க்க குணம் கொண்ட நாய்​களை வீடு​களில் வளர்ப்​பவர்​கள், பராமரிப்பு செலவு அதி​கரிக்​கும்​போது, அவற்றை சாலை​யில் விட்​டு​விடு​கின்​றனர்.

இதை தடுக்க, வளர்ப்பு நாய்​களை வீட்​டில் பராமரிக்க உரிமம் பெறு​வதை மாநக​ராட்சி கட்​டாய​மாக்​கி​யுள்​ளது. மேலும், குறிப்​பிட்ட வளர்ப்பு நாயின் உரிமை​யாளரை கண்​டறிய, மைக்ரோ சிப்​களை​யும் பொருத்தி வரு​கிறது. அவற்​றுக்கு ரேபிஸ் நோய் தடுப்​பூசிகளும் செலுத்தி வரு​கிறது.

சென்னை மாநக​ராட்​சி​யிடம் இது​வரை, 1,05,556 வளர்ப்பு நாய்​களின் விவரங்​கள் பதிவு செய்​யப்​பட்​டு, 57,626 நாய்​களுக்கு உரிமங்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. உரிமம் பெறா​விட்​டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்​கப்​படும் என்று மாநக​ராட்சி எச்​சரித்​துள்​ளது.

உரிமம் பெறு​வதற்​கான அவகாசம் கடந்த 14-ம் தேதி​யுடன் நிறைவடைந்​தது. இந்​நிலை​யில், நேற்று முதல் உரிமம் பெறாமல் சாலைகளுக்கு அழைத்​து​வரப்​படும் நாய்​களை கண்​டறிந்து அவற்​றுக்கு அபராதம் விதித்து வரு​கின்​றனர்.

நேற்று ஒரே நாளில் உரிமம் பெறாதது, கழுத்து பட்டை அணி​யாமல் வெளி​யில் கொண்டு வந்​தது என ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது. சென்னை முழு​வதும் இப்​பணி​யில் 15 அமலாக்க குழு​வினர் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர்.

மேலும், சுகா​தார ஆய்​வாளர்​கள் மூலம் வீடு வீடாக சென்று ஆய்வு செய்​யும் பணி​களும் நடை​பெறுகின்​றன. நவீன கருவி மூலம் நாய்க்கு மைக்ரோ சிப் பொருத்​தப்​பட்​டுள்​ளதா என சோதனை செய்​கின்​றனர்.

அதே​நேரத்​தில், செல்​வாக்கு மிக்​கவர்​களின் வீடு​களுக்​குள் இவர்​களால் நுழைய முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது. வீட்டு உரிமை​யாளர்​களால் மாநக​ராட்சி அலு​வலர்​கள் மிரட்​டப்​படு​வதும், விரட்​டப்​படு​வதும் நிகழ்ந்து வரு​கிறது.

போதிய பாது​காப்பு இன்றி மாநக​ராட்சி சுகா​தா​ரத்​துறை இத்​திட்​டத்தை செயல்​படுத்​து​வ​தால், அலு​வலர்​கள்​ சிரமத்​துக்​குள்​ளாவ​தாக புகார்​கள்​ எழுகின்​றன.

<div class="paragraphs"><p>சென்னை மாநகராட்சிப் பகுதியில் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறும் அவகாசம் கடந்த 14-ம் தேதி முடிவடைந்தது. கொளத்தூர் பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று, நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளதா என்று நவீன கருவி மூலம் சோதனை செய்தனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |</p></div>
தந்தை - மகன் ஒன்றிணைய சாத்தியக் கூறுகள் குறைவு: பாமக வழக்கறிஞர் பாலு தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in