தந்தை - மகன் ஒன்றிணைய சாத்தியக் கூறுகள் குறைவு: பாமக வழக்கறிஞர் பாலு தகவல்

தந்தை - மகன் ஒன்றிணைய சாத்தியக் கூறுகள் குறைவு: பாமக வழக்கறிஞர் பாலு தகவல்
Updated on
1 min read

சென்னை: தந்​தை​யும் மகனும் ஒன்​றிணைய சாத்​தி​யக் கூறுகள் மிக​வும் குறைவு என பாமக செய்​தித்​தொடர்​பாளர் வழக்​கறிஞர் பாலு தெரி​வித்​தார்.

சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: சென்​னை​யில் டிச.17-ம் தேதி நடை​பெறும் பாமக ஆர்ப்​பாட்​டத்​துக்கு உரிய போலீஸ் பாது​காப்பை வழங்​கு​வ​தாக உறுதி அளிக்​கப்​பட்டுள்​ளது.

இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் பல்​வேறு அரசி​யல் கட்​சிகள், சமூக அமைப்​பு​களை சேர்ந்​தவர்​கள் கலந்து கொள்​கின்​றனர். ஜி.கே.மணி பேட்டி கொடுக்க வேண்​டிய தேவை​யும், அவசி​ய​மும் என்ன என்​பதை அவர் விளக்க வேண்​டும்.

பாமக​வும், கட்​சி​யின் மாம்​பழம் சின்​ன​மும் எங்​களிடம் தான் உள்​ளது. பாமக​வின் தலை​வர் அன்​புமணி தான். தேர்​தல் ஆணை​யம் அங்​கீ​காரம் வழங்​கி​யுள்​ளது. பாமக தொண்​டர்​கள் அனை​வரும் அன்​புமணி பக்​கம் தான் உள்ளனர்.

ராம​தாஸ், அன்​புமணி இடையே ஏற்​பட்ட பிரச்​சினை​யில் இரு​வரை​யும் சமா​தானம் செய்​யும் முயற்​சி​யில் ஈடு​பட்​ட​தாக ஜி.கே.மணி தெரிவிக்​கிறார். இது முழுக்க முழுக்க தவறானது.

ஜி.கே.மணி ஒரு​முறை கூட அன்​புமணியை சந்​தித்து பேச​வில்​லை. மாறாக, அன்​புமணிக்கு எதி​ராக ராம​தாஸை தூண்டி விட்​டார். ராம​தாஸ் - அன்​பு மணி ஒன்​றிணைய அனை​வரும் விரும்​பினோம். அதற்​கான முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​பட்​டன. ஆனால், தற்​போது அதற்​கான சாத்​தி​யக்​ கூறுகள்​ மிக​வும்​ குறை​வாகவே உள்​ளன.

தந்தை - மகன் ஒன்றிணைய சாத்தியக் கூறுகள் குறைவு: பாமக வழக்கறிஞர் பாலு தகவல்
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தயாராகும் தென் மாவட்ட காளைகள்: காளை வளர்க்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in