ஜூன் 24-ல் மாநகராட்சி மாமன்றக் கூட்டம்: ஆட்சி மாற்றத்துக்கு பிறகு முதல்முறையாக நடக்கிறது

ஜூன் 24-ல் மாநகராட்சி மாமன்றக் கூட்டம்: ஆட்சி மாற்றத்துக்கு பிறகு முதல்முறையாக நடக்கிறது
Updated on
1 min read

சென்னை: மாநகராட்சி மாமன்​றக் கூட்​டம், 3 மாதங்​களுக்கு பிறகு வரும் 24-ம் தேதி நடை​பெறுகிறது. சென்னை மாநக​ராட்சி மன்​றக் கூட்​டம், மாதம்​தோறும் நடை​பெறு​வது வழக்​கம்.

இதில், சென்னை மாநகரப் பகு​தி​யில் செயல்​படுத்த உள்ள திட்​டங்​களுக்​கான அனு​ம​தி, முக்​கிய திட்​டங்​களுக்கு அரசின் அனு​மதி கோரு​வது, அரசின் முக்​கிய அரசாணை​களை மாநக​ராட்​சி​யில் செயல்​படுத்த அனு​மதி கோரு​வது உள்​ளிட்ட தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​படும்.

வார்​டு​களில் உள்ள பிரச்​சினை​கள் குறித்து கவுன்​சிலர்​கள் பேசு​வார்​கள். அதற்கு மேயர் மற்​றும் அதி​காரி​கள் பதில் அளிப்​பார்​கள். இந்த கூட்​டம் கடைசி​யாக கடந்த பிப்​ர​வரி மாதம் நடை​பெற்​றது. அப்​போது மாநக​ராட்சி பட்​ஜெட்​டும் தாக்​கல் செய்​யப்​பட்​டது.

அதனைத் தொடர்ந்​து, மார்ச் மாதம் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் அறிவிக்​கப்​பட்​ட​தால், 2 மாதங்​களாக மாமன்​றக் கூட்​டம் நடை​பெற​வில்​லை. தேர்​தல் முடிந்து தவெக அரசு ஆட்​சிப் பொறுப்பை ஏற்ற நிலை​யில், கடந்த மே மாதத்​தி​லும் மாமன்​றக் கூட்​டம் நடை​பெற​வில்​லை.

மாநக​ராட்​சி​யின் 200 கவுன்​சிலர்​களில் 152 பேர் திமுகவை சேர்ந்​தவர்​களாகவே உள்​ளனர். சென்னை மாவட்​டத்​தில் உள்ள 22 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில், 20-ல் தொகு​தி​களில் தவெக எம்​எல்​ஏக்​களே வெற்றி பெற்​றுள்​ளனர் புதிய ஆட்சி அமைந்த பிறகு, முதல்​வர் விஜய்​யை, மேயர் ஆர்​.பிரி​யா, துணை மேயர் மு.மகேஷ்கு​மார் ஆகியோர் மரி​யாதை நிமித்​த​மாக சந்​திக்​க​வில்லை என்ற சர்ச்சை இருந்து வரு​கிறது.

புதிய அரசின் அனு​ம​தி​யில்​லாத​தால், மாமன்​றக் கூட்​டம் நடை​பெற​வில்லை என்​றும் கூறப்​பட்​டது. இந்​நிலை​யில், இம்​மாதம் 24-ம் தேதி காலை 10 மணிக்கு மாமன்ற கூட்​டம் நடை​பெற உள்​ளது.

தவெக தலை​மை​யில் புதிய ஆட்சி அமைந்த பிறகு நடை​பெறும் கூட்​டம் என்​ப​தால், இக்​கூட்​டம் முக்​கி​யத்​து​வம் பெறுகிறது.

தமிழகத்​தின் பல்​வேறு உள்​ளாட்​சிகளில் நடை​பெற்ற மன்ற கூட்​டங்​களில், தவெக எம்​எல்​ஏக்​கள், கட்சி நிர்​வாகி​கள் பங்​கேற்​ற​தால், திமுக மற்​றும் தவெக​வினர் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலை​யில், இந்த மாமன்ற கூட்​டத்​தில், சுவாரஸ்​யங்​களுக்கு பஞ்​சம் இருக்​காது என மாநக​ராட்​சி வட்​டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜூன் 24-ல் மாநகராட்சி மாமன்றக் கூட்டம்: ஆட்சி மாற்றத்துக்கு பிறகு முதல்முறையாக நடக்கிறது
தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம்: திமுக, காங்கிரஸ், மதிமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in