சென்னையில் 160 கி.மீ. நீள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தகவல்

சென்னையில் 160 கி.மீ. நீள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தகவல்
Updated on: 
1 min read

சென்னை: சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் வெளி​யிட்ட அறி​விப்​பின்​படி சென்​னை​யில் ரூ.150 கோடி செல​வில் 160 கி.மீ. நீள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

வடகிழக்கு பருவ மழைக்கு முன் இப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​படும் என்று மாநகராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்​சி​யில் 418.56 கி.மீ. நீள​முடைய 488 பேருந்து தட சாலைகளும், 565.89 கி.மீ. நீள​முடைய 35,978 உட்​புறச் சாலைகளும் பராமரிக்​கப்​பட்டு வரு​கின்​றன.

இந்​நிலை​யில் 2026-27 நிதி​யாண்​டில் மாநக​ராட்​சிக்​குட்​பட்ட 360 கி.மீ. நீள​முடைய பேருந்து தட சாலைகள் மற்​றும் உட்​புறச் சாலைகள் ரூ.300 கோடி​யில் மேம்​படுத்​தப்​படும் என சட்​டப்​பேர​வை​யில் 110 விதி​யின் கீழ் முதல்​வர் விஜய் அறி​வித்​தார்.

அதன் அடிப்​படை​யில், மாநக​ராட்​சி​யில் முதல்​கட்​ட​மாக மண்​டலம் 1 முதல் 15 வரை உள்ள சேதமடைந்த 45.13 கி.மீ. நீள​முள்ள 66 பேருந்து தட சாலைகள் மற்​றும் 114.87 கி.மீ. நீள​முள்ள 714 உட்​புறச் சாலைகள் என மொத்​தம் 160 கி.மீ. நீளத்​திலான சாலைகளை ரூ.150 கோடி​யில் மேம்​படுத்​து​வதற்கு விரி​வான திட்ட அறிக்​கைகள் தயார் செய்​யப்​பட்டு நிர்​வாக அனு​ம​திக்​காக தமிழக அரசுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளது.

இப்​பணி​களுக்கு உடனடி​யாக ஒப்​பந்​தப்​புள்​ளி​கள் கோரப்பட்டு எதிர்​வரும் வடகிழக்கு பருவ மழைக்கு முன் சாலைகள் மேம்​படுத்​தும் பணி மேற்​கொள்​ளப்​படும். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

சென்னையில் 160 கி.மீ. நீள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தகவல்
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல்: தவெக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் விஜய் இன்று பிரச்சாரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in