விவசாயிகளிடம் பயிர்க்கடன் வசூலை நிறுத்த வங்கிகளுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவு

விவசாயிகளிடம் பயிர்க்கடன் வசூலை நிறுத்த வங்கிகளுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவு
Updated on
1 min read

சென்னை: கூட்​டுறவுச் சங்​கங்​களின் கூடு​தல் பதி​வாளர் எஸ்​.சுப்​பிரமணி​யன், மண்டல இணைப் பதி​வாளர்​கள் மற்​றும் மாவட்ட மத்​திய கூட்​டுறவு வங்​கி​களின் மேலாண்மை இயக்​குநர்​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்​கை:

பயிர்க் கடன் தள்​ளு​படி திட்​டம் 2026-ன் கீழ் பகுதி தள்​ளு​படி தொகை பெற்ற விவ​சா​யிகள், எஞ்​சிய தொகையை முழு​மை​யாக செலுத்தி கடனை முடிக்​காமல் தவணை தவறிய நிலை​யில் இருந்​தால், அவர்​களிடம் நிலு​வைத் தொகையை வசூலிப்​ப​தற்கு கடுமை​யான நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​வ​தாக அறியப்​படு​கிறது.

தற்​போது இது​சார்ந்து கூட்​டுறவுச் சங்​கங்​களுக்கு சில முக்​கிய அறி​வுரைகள் வழங்​கப்​படு​கின்​றன. அதன்​படி பயிர்க் கடன் நிலுவை தொடர்​பான அனைத்து வசூல் நடவடிக்​கைகளை​யும் மறு உத்​தரவு வரும் வரை தற்​காலிக​மாக நிறுத்​திவைக்க வேண்​டும்.

பயிர்க்​கடனை முழு​மை​யாக நிலுவை இல்​லாமல் திருப்​பிச் செலுத்​திய அனைத்து விவ​சா​யிகளுக்கு செப்​டம்​பர் 30-ம் தேதிக்​குள் புதிய பயிர்க்கடன் வழங்க வேண்​டும்.

இந்த வழி​காட்​டு​தல்​களை அனைத்து கூட்​டுறவுச் சங்​கங்​களுக்​கும் தெரி​வித்​து, அவை முறை​யாக பின்​பற்​றப்​படு​வதை உறு​தி​செய்ய வேண்​டும். மேலும், இந்த நடவடிக்​கைகள் தொடர்​பாக தொடர்​கண்​காணிப்பு மேற்​கொள்ள வேண்​டும்.

விவசாயிகளிடம் பயிர்க்கடன் வசூலை நிறுத்த வங்கிகளுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவு
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்படும்: அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in