பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட குன்னூர் ரயில் நிலையம்!

புதுப்பிக்கப்பட்ட குன்னூர் ரயில் நிலையம்.

புதுப்பிக்கப்பட்ட குன்னூர் ரயில் நிலையம்.

Updated on
1 min read

குன்னூர்: ரூ.12.18 கோடி​யில் பழமை மாறாமல் புதுப்​பிக்​கப்​பட்ட குன்னூர் ரயில் நிலை​யத்தை காணொலி வாயி​லாக பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்து வைத்தார்.

நாடு முழு​வதும் அம்​ரித் பாரத் திட்​டத்​தின் கீழ் 75 ரயில் நிலை​யங்கள் மேம்​பட்ட வசதி​களு​டன் புனரமைக்​கப்​பட்​டுள்​ளன. இதில், நீல​கிரி மாவட்​டம் குன்​னூர் ரயில் ​நிலை​ய​மும் ஒன்​று. குன்​னூர் ரயில் நிலை​யம் ரூ.12.18 கோடி செல​வில் பழமை மாறாமல் புனரமைக்​கப்​பட்​டுள்​ளது.

நவீன முன்​ப​திவு அலுவலகம், மேம்​படுத்​தப்​பட்ட காத்​திருப்போர் அறை மற்​றும் ஓய்வு அறை, நீல​கிரி மாவட்ட வனப் பகு​தி​களில் வாழும் வன விலங்​கு​கள் மற்​றும் பறவை​களின் ஓவி​யங்​கள், எல்​இடி மின் ஒளி அலங்​காரங்​கள் உள்​ளிட்ட வசதி​கள் செய்யப்​பட்​டுள்​ளன.

இந்த ரயில் நிலை​யத்தை பிரதமர் நரேந்​திர மோடி பஞ்​சாப் மாநிலம் ஜலந்​தரில் இருந்து காணொலி வாயி​லாக நேற்று மதி​யம் திறந்து வைத்​தார்.

இதை முன்​னிட்டு குன்​னூர் ரயில் நிலை​யத்​தில் நடந்த நிகழ்ச்​சி​யில், சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் கே.எம்​.​ராஜூ (குன்​னூர்), மு.​போஜ​ராஜன் (ஊட்​டி), குன்​னூர் நகர் மன்ற தலை​வர் சுசீலா, சேலம் கோட்ட ரயில்வே முதன்​மை, தலைமை இயந்​திர பொறுப்பு மேலா​ளர் முகுந்த் ஆகி​யோர் கலந்​து​கொண்​டனர்.

நிகழ்ச்​சி​யில், ‘விக்​ஷித் பாரத், விக்​ஷித் ரயில்வே’ என்ற தலைப்பில் நடை​பெற்ற பல்​வேறு போட்டிகளில் கலந்​து​கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவி​களுக்கு பரிசுகள் வழங்​கப்​பட்​டன.

ரயில்வே ஊழியர்​கள் மற்​றும் அவர்​களது குழந்​தைகள் பங்​கேற்ற கலை நிகழ்ச்​சிகள் மற்​றும் தோடர் பழங்​குடி​யினரின் பாரம்​பரிய நடன நிகழ்ச்சி இடம்​பெற்​றது.

<div class="paragraphs"><p>புதுப்பிக்கப்பட்ட குன்னூர் ரயில் நிலையம்.</p></div>
அரசு பேருந்து கட்டணத்தில் 500 ஆம்னி பேருந்துகளை இயக்கத் தயார்: பேருந்து உரிமையாளர்கள் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in