மேகேதாட்டு அணை விவகாரம்; அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

திருமாவளவன்

திருமாவளவன்

Updated on
1 min read

வேலூர்: மேகே​தாட்டு அணை விவ​காரத்​தில் தமிழக முதல்​வர் விஜய் அனைத்துக் கட்சி கூட்​டத்​தைக் கூட்டி விவா​திக்க வேண்​டும் என விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன் வலி​யுறுத்​தி​உள்​ளார்.

வேலூரில் நடை​பெற்ற கட்​சி​யின் நிர்​வாகி இல்ல திருமண விழா​வில் பங்​கேற்ற திரு​மாவளவன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தவெக அரசுக்கு விசிக ஆதரவு அளித்து அமைச்​சர​வை​யிலும் இடம் பெற்​றுள்​ளது. இதுதொடர்​பாக கட்​சி​யின் எதிர்​கால அரசி​யல் குறித்து உயர்​நிலை கூட்​டத்​தைக் கூட்டி ஆலோ​சிக்​க​வுள்​ளோம். குறிப்​பாக அண்​ணா​மலை பாஜக​விலிருந்து வெளி​யேறி அனு​மதி பெற்று ஒரு இயக்​கத்​தைத் தொடங்​கு​கிறார்.

அவர் பாஜக​விலிருந்து வெளி​யேறு​வது என்​றால் செய்​தி​யாளர்​களுக்கு அறி​விப்பு செய்​தால் போதும். ஆனால் அரசு அதி​காரி போல் பாஜக​வுக்கு வில​கல் கடிதம் கொடுத்து அனு​மதி பெற்று அதன் பின்​னர் புதிய இயக்​கம் தொடங்​கு​கிறார். மதவாத அரசி​யல் எந்த அவதா​ரம் எடுத்​தா​லும் அதை தமிழக மக்​கள் அடையாளம் கண்​டு​கொள்​வார்​கள்.

மேக​தாட்டு அணை விவ​காரத்​தில் அனைத்​துக் கட்சி கூட்​டத்​தைக் கூட்ட முன்​னாள் அமைச்​சர் துரை​முரு​கன் கூறி​யுள்​ளார். மேலும், சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் முன்​மொழிந்த தீர்​மானத்​துக்கு அனைத்​துக் கட்​சிகளும் ஆதரவு தெரி​வித்​துள்​ளன. மேகே​தாட்​டு​வில் அணைக்​கட்ட மத்​திய அரசு அனு​ம​திக்​கக் கூடாது என முதல்​வர் விஜய் தெளிவுபடுத்​தி​யுள்​ளார்.

இதனை உறு​திப்​படுத்​தச் சட்​டப்​பேர​வை​யில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது. ஆகவே, அனைத்​துக் கட்​சிகளும் எவ்​வளவு கருத்து முரண்​பாடு​கள் இருந்​தா​லும் இதில் ஒற்​றுமை​யுடன் செயல்பட வேண்​டும். இதுதொடர்​பாக அனைத்துக் கட்சி கூட்​டத்​தைக் கூட்ட வேண்​டும். தமிழகத்​தின் நலனை முன்​னிறுத்தி பாலியல் கொடுமை​கள் பெண்​கள் சிறுமிகள் தொடர்​பான விவ​காரங்​களில் கூடு​தல் கவனம் செலுத்த வேண்​டுமென்ற பொறுப்​புணர்வு முதல்​வருக்கு இருக்​கிறது. பாலியல் குற்​றங்​களை தடுக்க தமிழக அரசு இன்​னும் அதிக அக்​கறை காட்ட வேண்​டும். இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

<div class="paragraphs"><p>திருமாவளவன் </p></div>
நீட் எழுதும் மாணவர்களின் சிரமத்தை குறைக்க விமான நிலையத்தில் 45 நிமிடம் காத்திருந்த பிரதமர் மோடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in