“அரிசி, பருப்பு, சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்துக” - மு.வீரபாண்டியன்

 மு.வீரபாண்டியன்

மு.வீரபாண்டியன்

Updated on: 
1 min read

சென்னை: “அரிசி, பருப்பு, சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “நாடு முழுவதும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் பொன்னி உள்ளிட்ட சில அரிசி ரகங்களின் விலை 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. பொன்னி அரிசி ரூ.90-க்கும், இட்லி அரிசி ரூ.35 வரையும், உளுத்தம் பருப்பு கிலோ ரூ.120-ல் இருந்து 150 ஆகவும், கடலைப் பருப்பு ரூ.80-ல் இருந்து ரூ.100 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

கர்நாடகத்தில் ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பு, தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிப்பு மற்றும் பதுக்கல்கள், ஆன்லைன் வர்த்தகம் உள்ளிட்ட காரணங்களால் இந்த விலையேற்றம் நடந்துள்ளது.

அதேபோல் கடந்த 2 மாதத்துக்கு முன்பு ரூ.48-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை, தற்போது ரூ.70 வரை உயர்ந்துள்ளது. எத்தனால் தயாரிப்புக்காக அதிக அளவில் கரும்பு பயன்படுத்தப்படுவதால் சர்க்கரை உற்பத்தி குறைந்து அதனால் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பு என்ற மத்திய அரசின் கொள்கையே இதற்கு காரணம்.

ஏற்கெனவே, வணிக நிறுவனங்களுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்ந்திருப்பதால், சாலையோர தேநீர் கடைகளில் கூட, டீ விலை ரூ.15 வரை உயர்ந்தது. காபி விலை ரூ.20 வரை அதிகரித்தது. இப்போது டீ, காபி விலை மீண்டும் உயரும்.

ஏழை, நடுத்தர குடும்பங்களை பாதிக்கும் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் ரேஷன் கடைகள் மூலமாக குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தள்ளார்.

<div class="paragraphs"><p> மு.வீரபாண்டியன்</p></div>
“தமிழகம் போதைப்பொருள் கடத்தலுக்கான மையமாக மாறியிருக்கிறதா?” - தவெக அரசுக்கு ஆ.ராசா கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in