அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஆர்​.எஸ்​.​பாரதி தகவல்

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஆர்​.எஸ்​.​பாரதி தகவல்
Updated on
1 min read

அண்ணா அறி​வால​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று திமுக அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பாரதி கூறிய​தாவது: கரூர் சம்​பவத்​தில் அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா​தான் முக்​கிய குற்​ற​வாளி. ஆனால், அந்த சம்​பவத்​தைப் பற்றி அவர் பொய்​யும், புரட்​டு​மாக பேசிவரு​கிறார். அவருக்கு எதி​ராக நீதி​மன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்​கப்​படும்.

கரூர் எம்​எல்​ஏ​வாக இருந்த எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர், அதி​முக சார்​பில் வெற்றி பெற்​றவர். தற்​போது ஆளும் கட்​சி​யில் சேர்ந்​து​விட்​ட​தால் அந்த தொகு​திக்கு விரை​வில் இடைத்​தேர்​தல் வரவுள்​ளது. எனவே, தொகுதி மக்​கள் கவனத்தை திசை திருப்​பும் நோக்​கத்​தில் இவ்​வாறு பேசி​யுள்​ளார்.

கரூர் சம்​பவத்​தின்​போது முன்​னாள் முதல்​வர் ஸ்டா​லின் எடுத்த நடவடிக்​கையை அனை​வருமே பாராட்​டினர். விஜய்​யைப் போல் முகத்தை மூடிக்​கொண்டு ஓடிப்​போய் ஒளிந்து கொள்​ள​வில்​லை.

அன்று மக்​களோடு துணைநின்​று, உயிர்​களைக் காப்​பாற்ற என்ன நடவடிக்​கை எடுக்க வேண்​டுமோ அதை உடனே மேற்​கொண்​ட​வர் ஸ்டா​லின் என்​பதை தமிழகம் மறந்​திருக்​காது. கரூர் வழக்கை விசா​ரிப்​ப​தற்கு எஸ்​ஐடி அமைத்து அதன் தலை​வ​ராக யாரை நாங்​கள் நியமனம் செய்​தோமோ அதே காவல்​துறை அதி​காரியைத்​தான் தற்​போது உளவுத்​துறை ஐஜி​யாக நியமித்​துள்​ளனர்.

எனவே, நடுநிலை​யோடு​தான் கடந்த திமுக அரசு நடந்​து​கொண்​டது என்​ப​தற்கு இதுவே சாட்​சி. இந்த விவ​காரதத்​தில் முக்​கிய குற்​ற​வாளி​யாக அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா சேர்க்​கப்​பட்​டுள்​ளார். உச்ச நீதி​மன்​ற உத்​தர​வுப்​படி ஓய்​வு​பெற்ற நீதிபதி தலை​மை​யில் விசா​ரணை நடந்து வரு​கிறது.

அதை சீர்​குலைக்​கும் வகை​யில் ஆதவ் பேசி​யுள்​ளார். எனவே, இதுகுறித்து திமுக சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தாக்​கல் செய்​ய​வுள்​ளோம். அதே​போல், அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா மீது நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கு தொடர​ உள்​ளோம்.

இவருடைய குடும்​பத்​தைச் சார்ந்​தவர்​கள் மீது கேரளா​வில் ரூ.928 கோடிக்கு லாட்​டரி ஊழல் வழக்கு நடந்​து​வரு​கிறது. எம்​எல்ஏ அனிதா ராதா கிருஷ்ணன் கைது சர்​வா​தி​காரத்​தின் உச்​சம். இதை நிச்​சய​மாக சட்​டரீ​தி​யாக நாங்​கள் சந்​திப்​போம்.

இந்த ஆட்சி எத்​தனை நாளுக்கு என்​பதை மக்​கள்​தான் முடிவு செய்ய வேண்​டும். எவ்​வித ஆக்​கப்​பூர்​வ​மான பணி​யும் இந்த ஆட்​சி​யில் நடக்​க​வில்​லை. தின​மும் கொலைகள், பாலியல் வன்​கொடுமை​கள் நடந்து கொண்​டிருக்​கின்​றன. அதையெல்​லாம் கவனிப்​ப​தற்கு இன்​றைய ஆட்​சி​யாளர்​களுக்​கு நேரமில்​லை. இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஆர்​.எஸ்​.​பாரதி தகவல்
தங்கக்கட்டி கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது: மூளையாக செயல்பட்டவரை பிடிக்க தனிப்படை அமைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in