தங்கக்கட்டி கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது: மூளையாக செயல்பட்டவரை பிடிக்க தனிப்படை அமைப்பு

தங்கக்கட்டி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட லோகேஷ், ஆறுமுகம், ஹேராம்.

தங்கக்கட்டி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட லோகேஷ், ஆறுமுகம், ஹேராம்.

Updated on
1 min read

சென்னை: தங்கக்கட்டி கொள்ளை வழக்​கில் ஒரு​வர் கைது செய்​யப்​பட்ட நிலை​யில் தலைமறை​வாக இருந்த மேலும் 2 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

சென்னை பிராட்வே பிர​காசம் சாலை​யைச் சேர்ந்​தவர் அங்​கித்​திலிப் மோர் (27). இவர் தனது அக்​கா​வின் கணவர் நடத்​திவரும் தங்​கம் உருக்​கும் மற்​றும் தங்​கத்​தின் தரத்தை சோதனை செய்​யும் கடையை நிர்​வகித்து வரு​கிறார்.

அந்த கடை சவு​கார்​பேட்டை மின்ட் தெரு​வில் உள்ள வணிக வளாகத்​தின் முதல் மாடி​யில் செயல்​பட்டு வரு​கிறது. கடந்த 1-ம் தேதி காலை, வாடிக்​கை​யாளர் ஒரு​வர் 1.5 கிலோ தங்க நகைகளை உருக்​கிக் கொடுக்​கும்​படி கடை​யில் ஒப்​படைத்​துச் சென்​ற​தாக கூறப்​படு​கிறது.

அதன்​படி அங்​கித்​திலிப் மற்​றும் கடை ஊழியர்​கள் தங்க நகைகளை உருக்கி தங்​கக்​கட்​டி​யாக தயாரித்து வைத்​திருந்​தனர். இந்​நிலை​யில் அதே நாள் மதி​யம் 3 பேர் கொண்ட முகமூடி கும்​பல் கடைக்​குள் புகுந்து கத்​தியை காட்டி மிரட்​டி, கடை​யில் இருந்​தவர்​களை தாக்​கினர்.

பின்​னர் கடை​யில் இருந்த 1.5 கிலோ தங்​கக்​கட்​டியை பறித்​துக்​கொண்டு தப்பி ஓடினர். அப்​போது அங்​கித் சக ஊழியர்​கள், அரு​கில் உள்ள கடை ஊழியர்​கள் உதவி​யுடன் தப்​பியோடிய​வர்​களில் ஒரு​வரை விரட்​டிப்​பிடித்​தார்.

மற்ற இரு​வரும் தங்​கக் கட்​டி​யுடன் தப்​பினர். பிடிபட்ட நபர் யானைக்​க​வுனி காவல் நிலை​யத்​தில் ஒப்​படைக்​கப்​பட்​டார். விசா​ரணை​யில் அவர் திருச்சி மாவட்​டம், லால்​குடியைச் சேர்ந்த ஆறு​முகம் என்ற அருண் (23) என்​பது தெரிய​வந்​தது.

அவரை கைது செய்த போலீ​ஸார் அவர் கொடுத்த தகவலின்​பேரில் கூட்​டாளி​களான யானைக்​க​வுனி கல்​யாணபுரத்​தைச் சேர்ந்த லோகேஷ் (24), அதே பகு​தி​யைச் சேர்ந்த ஹேராம் என்ற ரமணா (24) ஆகிய மேலும் இரு​வரை கைது செய்​துள்​ளனர்.

இந்த கொள்​ளைக்கு திட்​டம் போட்டு கொடுத்து மூளை​யாக செயல்​பட்ட நபர் தலைமறை​வாக உள்​ளார். அவரை போலீ​ஸார் தனிப்​படை அமைத்து தேடி வரு​கின்​றனர். இது ஒரு​புறம் இருக்க கொள்​ளை​யடித்த 1.5 கிலோ தங்​கக்​கட்​டி மீட்​கப்​பட்​டது.

<div class="paragraphs"><p>தங்கக்கட்டி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட லோகேஷ், ஆறுமுகம், ஹேராம்.</p></div>
பொது பிரச்சினையை சுட்டிக்காட்டியதற்காக ஆளுநரை விமர்சிப்பதா? - தமிழிசை கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in