மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக முதல்வர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அரசுக்கு பிஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

கர்​நாடக முதல்வர் டி.கே.சிவகு​மார், தமிழ்​நாடு அனைத்து விவ​சா​யிகள் சங்​கங்​களின் ஒருங்​கிணைப்​புக் குழு தலை​வர் பிஆர்​.​பாண்​டியன்

கர்​நாடக முதல்வர் டி.கே.சிவகு​மார், தமிழ்​நாடு அனைத்து விவ​சா​யிகள் சங்​கங்​களின் ஒருங்​கிணைப்​புக் குழு தலை​வர் பிஆர்​.​பாண்​டியன்

Updated on
1 min read

திருவாரூர்: மேகே​தாட்டு அணை விவ​காரத்​தில் கர்​நாடக முதல்வர் டி.கே.சிவகு​மார் மீது நீதி​மன்​ற அவம​திப்பு வழக்கு தொடர வேண்​டும் என தமிழக அரசுக்கு தமிழ்​நாடு அனைத்து விவ​சா​யிகள் சங்​கங்​களின் ஒருங்​கிணைப்​புக் குழு தலை​வர் பிஆர்​.​பாண்​டியன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளியிட்​டுள்ள அறிக்​கை: மேகே​தாட்டு அணை விவ​காரத்​தில் கர்​நாட​கா​வின் வரைவுத்​திட்ட அறிக்​கைக்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், அது சட்​டத்​துக்கு உட்​பட்​டதா என்​பதை மத்​திய அரசும், நீர் வள ஆணை​ய​மும் முடிவு செய்​யும் என தெரி​வித்​துள்​ளது.

ஆனால், அதற்கு மாறாக மத்​திய ஜல்​சக்தி துறை அமைச்​சர் பாட்​டீலிடம் தமிழகம் தொடர்ந்த வழக்கை உச்ச நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​துள்​ள​தாக​வும், அணை கட்ட அனு​மதி வேண்​டும் எனவும் கோரிக்கை விடுத்​துள்​ளது நீதி​மன்ற தீர்ப்பை அவம​திக்​கும் நடவடிக்கை ஆகும். எனவே தமிழக அரசு, அவர் மீது நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தொடர வேண்டும்.

இந்​நிலை​யில், வாட்​டாள் நாக​ராஜ் ஜூலை 15-ல் போராட்​டம் அறி​வித்​துள்​ளார். காவிரி பிரச்​சனை​யில் இன மோதலை உரு​வாக்​கு​வதை அனு​ம​திக்க கூடாது. தமிழர்​களுக்கு பாதிப்பு ஏற்​படுமே​யா​னால் காங்​கிரஸ் தேசிய தலைமை பொறுப்​பேற்க வேண்​டும்.

<div class="paragraphs"><p>கர்​நாடக முதல்வர் டி.கே.சிவகு​மார்,&nbsp;தமிழ்​நாடு அனைத்து விவ​சா​யிகள் சங்​கங்​களின் ஒருங்​கிணைப்​புக் குழு தலை​வர் பிஆர்​.​பாண்​டியன்</p></div>
தமிழகத்​தில் சட்​டப்​படி​யான ஆட்சி நடை​பெறுகிறது: மு.வீரபாண்டியன் கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in