‘எந்த ட்ராப்பிலும் சிக்காமல்...’ - தவெக எம்எல்ஏக்களிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன?

முதல்வர் விஜய் |   கோப்புப் படம்

முதல்வர் விஜய் |   கோப்புப் படம்

Updated on: 
2 min read

சென்னை: தவெக எம்​எல்ஏக்களு​டன் முதல்வர் விஜய் இன்று முக்​கிய ஆலோ​சனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்றது.

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆகியோர் சர்ச்சையில் சிக்கியுள்ள பரபரப்பான சூழலில், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர முதல்வர் விஜய் தலைமையில் தவெக எம்எல்ஏக்கள் கூட்​டம் இன்று நடை​பெற்றது.

இந்தக் கூட்டத்தில் கட்​சி​யின் பொதுச் செய​லா​ள​ரும் அமைச்​சரு​மான என்.ஆனந்த் உள்​ளிட்ட முக்​கிய நிர்​வாகி​கள் பங்​கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தவெக எம்எல்ஏக்களுக்கு முதல்வர் விஜய் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இக்​கூட்​டத்​தில் முதல்வர் விஜய் பேசியதாக கூறப்படுவதாவது: ‘நமக்கு எதிர்க்கட்சிகள் அதிகமாக உள்ளன. எனவே, அவர்களின் எந்த ட்ராப்பில் சிக்காமல் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். சட்டம் - ஒழுங்கு பிரச்னையில் காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி உள்ளேன்.

நமது ஆட்சிக்கு எதிராக பல்வேறு தவறான, அவதூறு செய்திகளை பரப்பி, அரசு நிர்வாகத்தை முடக்க தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அத்தகைய செயல்களுக்கு நமது சட்டப்பேரவை உறுப்பினர்கள் எந்த விதத்திலும் இடம் தந்துவிடக் கூடாது.

உங்களை யாராவது பணி செய்யவிடாமல் தடுத்தால் அதனை என் கவனத்துக்கு கொண்டுவாருங்கள். உங்கள் தொகுதியில் நீங்கள் செய்யக்கூடிய பணி தான் அடுத்த தேர்தலில் உங்களை வேட்பாளராக ஆக்கும். உங்கள் தொகுதி தொடர்பாகவோ அல்லது கட்சி ரீதியாகவோ ஏதாவது பிரச்சினை இருந்தால் உடனடியாக என்னை நேரில் வந்து சந்திக்கலாம். என்னை நேரில் சந்திப்பதை யாராவது தடுத்தாலும் அது குறித்தும் என்னிடம் சொல்லுங்கள்’ என்றார்.

மேலும், இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசாக பட்டு வேட்டி, பட்டு புடவை ஆகியவற்றை முதல்வர் விஜய் வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் முதலில் பெண் எம்எல்ஏக்களிடம் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் பலரிடமும் குழுவாகவும், தனித்தனியாகவும் அவர் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கியுள்ள எம்எல்ஏ அருள் விக்னேஷ் மற்றும் பேரவைத் துணைத் ரவிசங்கர் ஆகியோரும் பங்கேற்றனர். இதில் அருள் விக்னேஷ்தான் இந்த கூட்டத்திலிருந்து கடைசியாக புறப்பட்டுச் சென்றார். இவர்கள் மீது கட்சி ரீதி​யி​லான ஒழுங்கு நட​வடிக்கை எடுக்​கப்​படுமா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

பின்னணி என்ன? - தமிழகத்​தில் சட்​டம் - ஒழுங்கு சீர்குலைந்​து​விட்​ட​தாகவும் குற்​றங்​கள் அதிகரித்துவிட்டதாகவும் திமுக, அதிமுக உள்​ளிட்ட எதிர்க்கட்​சிகள் தொடர்ந்து விமர்​சனங்​களை முன்​வைத்து வரு​ம் நிலை​யில், மாநிலத்​தின் சட்​டம் ஒழுங்கு நில​வரம் குறித்து முதல்​வர் விஜய், உயரதி​காரி​களு​டன் தலை​மைச் செயல​கத்​தில் நேற்று ஆலோ​சனை நடத்​தினார்.

இது ஒருபுறம் இருக்க ஆளும் கட்​சி​யினரின் செயல்பாடுகளும் சர்ச்​சைக்​குள்​ளாகி வரு​கின்​றன. குறிப்பாக சட்​டப்​பேரவைத் துணைத் தலை​வர் ரவிசங்​கர், கள்​ளக்​குறிச்சி தொகுதி தவெக எம்​எல்ஏ அருள் விக்​னேஷ் மீதான குற்​றச்​சாட்​டுகள் அதிர்​வலைகளை ஏற்​படுத்தி உள்​ளன.

துறையூர் கண்​ணபிரான் காலனியைச் சேர்ந்த கார்த்​திக் குமார் என்​பவர் தனது பகுதி​யில் ஒரு வார​மாகக் குடிநீர் விநியோகம் சீராக நடை​பெறவில்லை எனவும், குப்​பைகள் அகற்​றப்​பட​வில்லை என முறை​யிட்​ட போது, அவரை ரவிசங்​கர் தகாத வார்த்​தைகளால் திட்டி, தாக்கி விரட்​டிய​தாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

கள்​ளக்​குறிச்சி தொகுதி தவெக எம்​எல்ஏ அருள் விக்​னேஷ், மாவட்ட ஆட்சி​யர் பத்​மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்​செய்​தி​கள் அனுப்​பிய​தாகவும், அவரது வீட்​டுக்கே சென்று பிரச்​சினை செய்​த​தாகவும், இதன் காரண​மாக ஆட்சி​யர் வீட்டுக்​குப் போலீஸ் பாது​காப்​புப் போடப்​பட்​டுள்ளதாகவும் எதிர்க்​கட்​சிகள் குற்​றம் சாட்​டின. இந்த 2 விவகாரங்​களும் தமிழக அரசி​யலில் புயலைக் கிளப்​பியுள்​ளன.

<div class="paragraphs"><p>முதல்வர் விஜய் |&nbsp; &nbsp;கோப்புப் படம்</p></div>
புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்புடைய ஒருவரைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லையா? - அரசு மீது ஐகோர்ட் அதிருப்தி

X