சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் வணிக வளாகத்துடன் நுழைவு வாயில்கள்: ரூ.269 கோடியில் ஒப்பந்தம்

சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் வணிக வளாகத்துடன் நுழைவு வாயில்கள்: ரூ.269 கோடியில் ஒப்பந்தம்
Updated on
1 min read

சென்னை: சோழிங்​கநல்​லூர், துரைப்​பாக்​கம் மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் வணிக வளாகங்​களு​டன் நுழைவு வாயில்​கள் கட்ட ரூ.268.80 கோடி​யில் ஒப்​பந்​தம் வழங்​கப்​பட்​டுள்​ளது. சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்​டத்​தில் மாதவரம் - சிறுசேரி இடையே 45.4 கி.மீ. தொலை​வுக்கு 3-வது வழித்தட கட்​டு​மானப் பணி​கள் நடை​பெற்று வருகின்றன.

இந்த வழித்​தடத்​தில் சோழிங்​கநல்​லூர் மற்​றும் துரைப்​பாக்​கம் மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் வணிக வளாகங்​களு​டன் கூடிய நுழைவு மற்​றும் வெளி​யேறும் கட்​டமைப்​பு​களை கட்​டு​வதற்கு ரூ.268.80 கோடி மதிப்​பீட்​டில் ஒப்​பந்​தம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இந்த ஒப்​பந்​தத்​தின்​படி துரைப்​பாக்​கத்​தில் 3 அடுக்கு அடித்​தளம், தரைத்​தளம் மற்​றும் 5 மேல் தளங்​களைக் கொண்ட வணிக வளாகம் கட்​டப்​பட​வுள்​ளது. சோழிங்​கநல்​லூரில் அடித்​தளம் மற்​றும் 8 மேல் தளங்​களைக் கொண்ட வணிக வளாகம் கட்​டப்​பட​வுள்​ளது.

மேலும் வழித்​தடம் 3 மற்​றும் வழித்​தடம் 5-க்கு இடையே இணைப்​புப் பாதை உடன் சோழிங்​கநல்​லூர் வணி​கக் கட்​டிடத்​தின் வழி​யாகச் செல்ல முடி​யும். இதன் மூலம் வணிக வளாகத்​திலிருந்து மெட்ரோ நிலை​யத்​துக்கு நேரடி​யாகச் செல்ல முடி​யும்.

இந்​தக் கட்​டு​மானப் பணி​கள் மெட்ரோ பயணி​களுக்கு நவீன வசதி​களை வழங்​கு​வதோடு, சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​துக்கு பயணக் கட்​ட​ணத்தை தவிர்த்த வரு​வாயை உயர்த்​து​வதை​யும் நோக்​க​மாகக் கொண்​டுள்​ளன.

இந்த ஒப்​பந்​தம் பிரிட்ஜ் ஆண்ட் ரூஃப் (Bridge and Roof) நிறு​வனத்​துக்கு ரூ.268.80 கோடி மதிப்​பில் வழங்​கப்​பட்​டுள்​ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் மேலாண் இயக்குநர் எம்​.ஏ.சித்​திக் முன்​னிலை​யில், சென்னை மெட்ரோ நிறு​வனத்​தின் திட்ட இயக்​குநர் தி.அர்ச்​சுனன் மற்​றும் பிரிட்ஜ் ஆண்ட் ரூஃப் நிறு​வனத்​தின் பொது மேலா​ளர் டி.ரவி ஆகியோர் இந்த ஒப்​பந்​தத்​தில் கையெழுத்திட்டனர்.

மந்​தைவெளி வளாகம்: இதே​போல இந்த வழித்​தடத்​தில் உள்ள மந்​தைவெளி சுரங்​கப்​பாதை மெட்ரோ ரயில் நிலை​யம் மற்​றும் மாநகர் போக்​கு​வரத்​துக் கழகத்​தின் மந்​தைவெளி பேருந்து பணிமனை ஆகிய​வற்றை இணைக்​கும் வித​மாக மந்​தைவெளி பணிமனையை பல்​வேறு வசதி​களு​டன் மேம்​படுத்​த​வும் பிரிட்ஜ் ஆண்ட் ரூஃப் நிறு​வனத்​துக்கு ரூ.167.08 கோடிக்கு ஒப்​பந்​தம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இந்த ஒப்​பந்​தத்​தின்​படி 29,385 சதுர மீட்​டர் பரப்​பள​வில் 2 கட்​டிடங்​கள் கட்​டப்​படும். ஒவ்​வொரு கட்​டிட​மும் 2 அடுக்கு அடித்​தளம், தரைத்​தளம் மற்​றும் 7 மேல் தளங்​கள் என்ற அமைப்​பில் கட்​டப்​படும். இங்கு பேருந்​துகளில் பயணி​கள் ஏறி இறக்​கு​வதற்​கான வசதி​கள், வணிக வளாகங்​கள் மற்​றும் அலு​வலக இடங்​கள் ஆகியவை இடம்​பெறும் என மெட்ரோ நிர்​வாகம் தெரிவித்துள்ளது.

சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் வணிக வளாகத்துடன் நுழைவு வாயில்கள்: ரூ.269 கோடியில் ஒப்பந்தம்
திருவொற்றியூர், மணலி​ பகுதிகளில் குடிநீர் விநியோகம் டிச.22-ம் தேதி தற்காலிக நிறுத்தம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in