புதுச்சேரியில் ‘நட்பு’ போட்டியால் கடும் சரிவை சந்தித்தது காங்கிரஸ்

புதுச்சேரியில் ‘நட்பு’ போட்டியால் கடும் சரிவை சந்தித்தது காங்கிரஸ்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் ‘நட்பு’ போட்டியால் கடும் சரிவை சந்தித்துள்ளது காங்கிரஸ் கட்சி. புதுச்சேரியில் இண்டியா கூட்டணிக்கு யார் தலைமை என்பதிலும் கூடுதல் தொகுதிகளைப் பெறுவதிலும் காங்கிரஸ்-திமுக இடையே கடும் போட்டி நிலவியது.

இதனால் இக்கூட்ட ணியே உடையும் நிலை ஏற் பட்டது. அத்துடன் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் 16, திமுக 13, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு இடத்தில் போட்டியிடுவதாக வேட்பு மனுதாக்கல் நிறைவுக்கு பிறகு அறிவிக்கப்பட்டது.

ஆனால், இண்டியா கூட்டணி யில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும், மார்க்சிஸ்ட் இரு இடங்களிலும், போட்டி காங்கிரஸ் வேட்பாளர்கள் 6 தொகுதிகளிலும் போட்டி யிட்டனர். அதிலும் திமுகவுக்கு எதிராகவே காங்கிரஸும் 5 தொகுதிகளில் போட்டியிட்டது.

குறிப்பாக திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் காலாப்பட்டு, ராஜ்பவன், திருபுவனை, மங்கலம், காரைக்கால் தெற்கு தொகுதிகளிலும், விசிகவுக்கு எதிராக உழவர்கரையிலும் காங்கிரஸ் போட்டியிட்டது.

அதேநேரத்தில், தொகுதி பங்கீடு, கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் களமிறங்கியதால் ஏற்பட்ட அதிருப்தியில் சற்று மனத்தாங்கலுடன் காங்கிரஸ், திமுக கூட்டணி பிரச்சாரம் நடந்தது. இண்டியா கூட்டணியின் பிளவை மையப்படுத்தியே எதிர்த்தரப்பில் என்டிஏ கூட்டணி பிரச்சாரம் மேற்கொண்டது.

இண்டியா கூட்டணி முறிவால் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அவர்கள் கட்சி பிரமுகர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் பிரச்சாரம் செய்தனர். விடுதலைத் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது கட்சி போட்டியிடும் தொகுதியிலும், செல்லும் வழியில் திமுக வேட்பாளர்கள் தொகுதியிலும் மட்டும் பிரச்சாரம் செய்தார்.

இதை ஈடுகட்ட தேசிய தலைவர்களை அழைத்து வந்து காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது. காங்கிரஸ் தலைவர் முகுல் வாஸ்னிக் கூட்டணியுடன் பேசி சரி செய்யத் தொடங்கினார். இதற்கு விசிக தரப்பும் செவி சாய்த்தது. ஆனால் இதர இண்டியா கூட்டணி கட்சிகள் ஒன்றுபடவே இல்லை.

ஒரே நாளில் புதுச்சேரிக்கு ஸ்டாலினும், ராகுலும் பிரச் சாரத்துக்கு வந்தாலும் ஒரேமேடையில் பிரச்சாரம் செய்யவில்லை. தனித்தனியாகவே பிரச்சாரம் செய்தனர்.

இண்டியா கூட்டணியிலேயே திமுகவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் காலாப்பட்டில் ஷாஜகான், காரைக்கால் தெ்ற்கு ஏவிஎஸ் சக்திவேல் பிரபு, ராஜ்பவனில் குமரன், திருபுவனையில் வேலு, மங்கலத்தில் ரகுபதி ஆகிய 5 பேரும் தோல்வியடைந்தனர்.

அதேபோல் இக்கூட்டணியில் விசிகவை எதிர்த்து உழவர் கரையில் போ்ட்டியிட்ட சிவ சங்கரன் ஆகிய அனைத்து போட்டி வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர்.

காலாப்பட்டு, காரைக்கால் தெற்கு, ராஜ்பவன் ஆகிய மூன்று தொகுதிகளில் திமுகவே வென்றது. ஆனால் காங்கிரஸோ கடந்த முறையை விட சரிந்து ஒரு தொகுதியில் மட்டுமே வென்றுள்ளது.

புதுச்சேரியில் ‘நட்பு’ போட்டியால் கடும் சரிவை சந்தித்தது காங்கிரஸ்
முதல்வர் ஆகிறார் விஜய்... தமிழகத்தில் அமையும் ‘மைனாரிட்டி’ அரசும், மக்கள் தீர்ப்பும் சொல்வது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in