புதுச்சேரியில் கை சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கும் காங்கிரஸாரால் குழப்பம்

திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மனுவை வாபஸ் வாங்க மறுப்பதால் சிக்கல்
புதுச்சேரியில் கை சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கும் காங்கிரஸாரால் குழப்பம்
Updated on
1 min read

புதுச்சேரி: புது​வை சட்​டப்​பேர​வைத்​ தேர்​தலில்​ ​காங்​கிரஸ்​, ​தி​முக, இடது​சா​ரி​கள்​, ​விடு​தலை சிறுத்​தைகள், தே​மு​தி​க, ம​தி​முக உள்​ளிட்​ட கட்​சிகள்​ இண்​டி​யா கூட்​ட​ணி​யை அமைத்​துள்​ளது.

ஆ​னால்​ இண்​டி​யா கூட்​ட​ணி​யில்​ இடம்​பெற்​றிருந்​த கட்​சிகள், கூட்​ட​ணி ஒப்​பந்​தத்​தை மீறி அவர​வர்​ ​விரும்​பிய தொகு​தி​களில்​ மனு ​தாக்​கல்​ செய்​துள்​ளனர்​. வேட்​புமனு ​தாக்​கலுக்​கு பிறகும்​ தொகு​தி பங்​கீட்​டு குழப்​பம்​ நீடிக்​கிறது. ​காங்​கிரஸ்​ 16 தொகு​தி​களில்​ ​போட்​டி​யிடு​கிறது. மீத​முள்​ள 14 தொகு​தி​கள்​ ​தி​முக வசம்​ அளிக்​கப்​பட்​டது. அக்​கட்​சி, உள்​ஒதுக்​கீ​டாக ​விசிக​வுக்​கு உழ​வர்​கரை தொகு​தி​யை ஒதுக்​கு​வ​தாக தெரி​வித்​தது. ஆ​னால், ​விடு​தலை சிறுத்​தைகள்​ கட்​சி ஊசுடு, நெட்​டப்​பாக்​கம்​, உழ​வர்​கரை ஆகிய 3 தொகு​தி​களி​லும்​ மனு ​தாக்​கல்​ செய்​துள்​ளது.

இதற்​கிடையே, இண்​டி​யா கூட்​ட​ணி​யில்​ சே​ராமல்​ ​மார்க்​சிஸ்ட்​ கம்​யூனிஸ்ட்​ ​முத்​தி​யால்​பேட்​டை, ​பாகூர், ​திரு​புவனை, லாஸ்​பேட்​டை ஆகிய 4 தொகு​தி​களி​லும்​ மனு ​தாக்​கல்​ செய்​துள்​ளது. இண்​டி​யா கூட்​ட​ணி​யில்​ தொடர்​வ​தாக தெரி​வித்​து வரும்​ இந்​தி​ய கம்​யூனிஸ்ட்​ கட்​சி தட்​டாஞ்​சாவடி, உழ​வர்​கரை ஆகிய இரு தொகு​தி​களில்​ மனு ​தாக்​கல்​ செய்​துள்​ளது.

​காங்​கிரஸ்​ தொகு​தி​களில்​ மனு​தாக்​கல்​ செய்​த தங்​கள்​ கட்​சி வேட்​பாளர்​களுக்கு கட்​சி​யில்​ இருந்​து வழங்​க வேண்​டிய ஏ, பி படிவங்​களை ​திமுக தலை​மை வழங்​க​வில்​லை. இத​னால்​ அவர்​களின்​ மனுக்​கள்​ தள்​ளு​படி செய்​யப்​பட்​டன. ஆ​னால்​, ​காங்​கிரஸ்​ ​சா​ர்​பில்​ மனு ​தாக்​கல்​ செய்​த அனை​வருக்​கும்​ அக்​கட்​சி ஏ, பி படிவங்​களை வழங்​கி​யுள்​ளது. இத​னால்​ அவர்​கள்​ அனை​வரும்​ ​காங்​கிரஸ்​ வேட்​பாளர்​களாக அங்​கீகரிக்​கப்​பட்​டு மனுக்​கள்​ ஏற்​கப்​பட்​டுள்​ளன.

இத​னால்​ ​தி​முக​வுக்​கு ஒதுக்​கப்​பட்​ட ​காலாப்​பட்​டு, ​ராஜ்பவன்​, நெல்​லித்​தோப்​பு, மங்​கலம்​, திரு​புவனை ஆகிய தொகு​தி​களில்​ ​காங்​கிரஸ்​ வேட்​பாளர்​களும்​ களத்​தில்​ உள்​ளனர்​. இவர்​களை ​வாபஸ்​ பெறும்​படி ​காங்​கிரஸ்​ தலை​மை அறி​வுறுத்​தி​யுள்​ளது. ஆ​னால்​, கட்​சி​யின்​ அறி​வுறுத்​தலை கருத்​தில்​ ​கொள்​ளாமல்​ ​காலாப்​பட்​டு தொகு​தி​யில்​ ​முன்​னாள்​ அமைச்​சர்​ ஷாஜ​கான்​, ​ராஜ்பவன்​ தொகு​தி​யில்​ வழக்​கறிஞர் குமரன்​, மங்​கலத்​தில்​ ரகுப​தி, திரு​புவனை​யில்​ வேலு ஆகியோர்​ ​வாக்​கு சேகரிக்​கும்​ பணியை தொடங்​கி ​விட்​டனர்​. நெல்​லித்​தோப்​பு தொகு​தி​யில்​ மட்​டும்​ இளைஞர்​ ​காங்​கிரஸ்​ தலை​வர்​ ஆனந்​த​பாபு, “கட்​சி தலை​மை உத்​தர​வை ஏற்​று மனுவை ​வாபஸ்​ பெறு​வேன்​” என்​று அறி​வித்​துள்​ளார்​.

மற்​ற 4 தொகு​தி​களில்​ கூட்​ட​ணி ஒப்​பந்​தத்​தை மீறி மனு ​தாக்​கல் செய்​த ​காங்​கிரஸ்​ வேட்​பாளர்​கள்​ கடைசி ​நாளான இன்று மனுவை ​வாபஸ்​ பெற வேண்​டும்​. இல்​லா​விட்​டால்​ இந்​த 4 தொகு​தி​களி​லும்​ ​தி​முக​, ​காங்​கிரஸ்​ போட்டியிடும் நிலை ஏற்படும்​.

புதுச்சேரியில் கை சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கும் காங்கிரஸாரால் குழப்பம்
திரிணமூல் vs பாஜக: மேற்கு வங்க தேர்தல் களம் 2026 எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in