காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது: முதல்வர் விஜய் வழங்கினார்

சென்னை கோட்டை முகப்பில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல்ஆளுமை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள், பதக்கங்களை முதல்வர் விஜய் வழங்கினார். முதல்வருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட விருதாளர்கள்.

சென்னை கோட்டை முகப்பில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல்ஆளுமை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள், பதக்கங்களை முதல்வர் விஜய் வழங்கினார். முதல்வருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட விருதாளர்கள்.

Updated on
2 min read

சென்னை: சுதந்​திர தின விழா​வில் காங்​கிரஸ் முன்​னாள் எம்​.பி. கிருஷ்ண​சாமிக்கு தகை​சால் தமி​ழர் விருதை முதல்​வர் விஜய் வழங்​கி​னார். பல்​வேறு துறை​களில் சாதனை படைத்​தவர்​களுக்கு அப்​துல் கலாம், கல்​பனா சாவ்லா விருதுகளை​யும் வழங்​கி​னார்.

சென்னை கோட்​டை​யில் நேற்று நடை​பெற்ற 80-வது சுதந்​திர தின விழா​வில் இந்த ஆண்​டுக்​கான விருதுகள், சிறப்பு பரிசுகளை முதல்​வர் விஜய் வழங்​கி​னார். அந்த வகை​யில், காங்​கிரஸ் மூத்த தலை​வ​ரும், முன்​னாள் எம்​.பி.​யு​மான எம்​.கிருஷ்ண​சாமிக்கு ரூ.10 லட்​சம் விருது தொகை, சான்​றிதழுடன் தகை​சால் தமி​ழர் விருது வழங்​கப்​பட்​டது.

கலாம், கல்பனா சாவ்லா விருது: சர்க்​கரை நோயியல் துறை சிறப்பு நிபுணர் வி.மோக​னுக்கு டாக்​டர் ஏபிஜே அப்​துல் கலாம் விருதும், நவுஷீன் பானு சந்த்​துக்கு துணிவு மற்​றும் சாகச செயலுக்​கான கல்​பனா சாவ்லா விருதுடன், தலா ரூ.5 லட்​சம் பரிசுத் தொகை, பதக்​கங்​களும் வழங்​கப்​பட்​டன.

நல்ஆளுமை விருதுகள்: பின்​னர், பல்​வேறு பிரி​வு​களில் குறிப்​பிடத்​தக்க பங்​களிப்பை வழங்​கிய​வர்​களுக்கு முதல்​வரின் நல்​ஆளுமை விருதுகள் வழங்​கப்​பட்​டன. அந்த வகை​யில், குழந்​தைப் பரு​வத்​தில் காணப்​படும் வளர்ச்​சிக் குறை​பாட்​டைக் கண்​டறிந்து, ஒருங்​கிணைந்த அணுகு​முறை மூலம் தீர்வு நடவடிக்​கை​களை மேற்​கொண்​டதற்​காக நீல​கிரி ஆட்​சி​யர் லட்​சுமி பவ்யா தன்​னீரு, மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் இயந்​திர​மயமாக்​கப்​பட்ட தூய்​மைப் பணிச் சேவை​களுக்​காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன பொது மேலா​ளர் எஸ்​.சதீஷ் பிரபு, எடை குறைந்த செயற்கை உறுப்​பு​களை தயா​ரித்​ததற்​காக கோவை அரசு மருத்​து​வக் கல்​லூரி, மருத்​து​வ​மனை டீன் எம்​.கீ​தாஞ்​சலி ஆகி​யோ​ருக்கு நல்​ஆளுமை விருதுகள் வழங்​கப்​பட்​டன.

மாற்​றுத் திற​னாளி​கள் நலன்: மாற்​றுத் திற​னாளி​கள் நலனுக்​காக சேவை புரிந்த வகை​யில் சிறந்த மாவட்ட ஆட்​சி​ய​ராக ச.தினேஷ்கு​மார் (கிருஷ்ணகிரி), சிறந்த மருத்​து​வ​ராக சென்​னையைச் சேர்ந்த ப.திரு​நாவுக்​கரசு, சிறந்த நிறு​வன​மாக திண்​டிவனத்​தைச் சேர்ந்த சிருஷ்டி பவுண்​டேஷன், சிறந்த சமூகப் பணி​யாள​ராக திரு​வண்​ணா​மலை​யைச் சேர்ந்த பா.மணி​மாறன், மாற்​றுத் திற​னாளி​களை அதிக அளவில் பணி​யமர்த்​திய நிறு​வன​மாக திருப்​பூர் எஸ்​சிஎம் கார்​மென்ட்ஸ் மற்​றும் சிறந்த கூட்​டுறவு வங்​கி​யாக மதுரை மாவட்ட மத்​திய கூட்​டுறவு வங்​கிக்கு விருதுகளை முதல்வர் விஜய் வழங்கினார்.

உள்​ளாட்​சிக்​கான விருதுகள்: சிறந்த உள்​ளாட்சி அமைப்​பு​களுக்​கான முதல்​வர் விருதுகள் பிரி​வில், சென்னை மாநக​ராட்​சி​யின் சிறந்த மண்​டல​மாக 6-வது மண்​டலம் (திரு.​வி.க. நகர்), 2-வது மண்​டலம் (மணலி) ஆகியவை முதல் 2 பரிசுகளைப் பெற்​றன. சிறந்த மாநக​ராட்சி பிரி​வில் கோவை, தஞ்சை முதல் 2 பரிசுகளைப் பெற்​றன. சிறந்த நகராட்​சி​யாக போடி​நாயக்​க​னூர், ஆரணி, விழுப்​புரம் முதல் 3 பரிசுகளை​யும், சிறந்த பேரூ​ராட்​சி​யாக திரு​விடைமருதூர், கருங்​கல், செட்​டிப்​பாளை​யம் 3 பரிசுகளை​யும் வென்​றன.

மகளிர் நலன், இளைஞர் விருது: மகளிர் நலனுக்​காகப் பணி​யாற்​றிய சிறந்த சமூக சேவகர் விருது ஓசூரைச் சேர்ந்த ராதாவுக்​கும், மகளிர் நலனுக்​காக பணி​யாற்​றிய சிறந்த தொண்டு நிறு​வனத்​துக்​கான விருது ஈரோடு அட்​ச​யம் டிரஸ்ட்​டுக்​கும் வழங்​கப்​பட்​டது.

இளைஞர்​களுக்​கான முதல்​வர் விரு​தில் ஆண்​கள் பிரி​வில் திருப்​பூர் இம்​மானுவேல் நெல்​சன் ஏசா, தூத்​துக்​குடி ஏ.சர​வணகு​மார், சேலம் நிர்​மல் கதிர்​வேல், பெண்​கள் பிரி​வில் மயி​லாடு​துறை ராஜேஸ்​வரி மகாதேவன்​, மதுரை சிந்​தா ஆகி​யோ​ருக்​கு முதல்​வர்​ விஜய்​ விருது வழங்​கி​னார்​.

<div class="paragraphs"><p>சென்னை கோட்டை முகப்பில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல்ஆளுமை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள், பதக்கங்களை முதல்வர் விஜய் வழங்கினார். முதல்வருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட விருதாளர்கள்.</p></div>
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய சுதந்திர தின விழா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in