

செல்வப்பெருந்தகை | கோப்புப் படம்
சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறும் தேதி ஜனவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், ‘2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கட்டணமில்லா விருப்ப மனுக்கள் 31.12.2025 வரை பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை உற்சாகத்துடன் அளித்துள்ளனர். மேலும், காங்கிரஸ் கட்சியினரின் வேண்டுகோளுக்கிணங்க, வருகிற (15.1.2026) ஜனவரி மாதம் 15-ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறுவது நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.