

கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு சம்பந்தம் சாலையில் சாய்வதாக புகாருக்குள்ளான மூன்று மாடி கட்டிடம்.
கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு சம்பந்தம் சாலையில் உள்ள 3 மாடி கட்டிடத்தில் அஸ்வின் என்பவருக்கு சொந்தமான நகை பட்டறை செயல்பட்டு வருகிறது. இங்கு 200 தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், கட்டிடத்தில் லேசான அசைவு இருப்பதாகவும், சரிந்துவிழும் ஆபத்து இருப்பதாக வும் கூறி அப்பகுதியினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள், கட்டிடத்தில் தங்க நகை வேலை செய்துவந்த 200 தொழிலாளர்களை வெளியேற்றினர். தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு வந்து, கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்தனர்.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “கடந்த 2004-ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடம் இது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டிடத்தில் இருந்தவர்களை வெளியேற்றி உள்ளோம்.
தொடர்ந்து ஆய்வுக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கட்டிடம் கட்டிய பொறியாளரிடம் கட்டிடத்தின் நிலைத்தன்மை சான்றிதழ் கேட்கப்பட்டுள்ளது” என்றனர்.
பொதுப்பணித்துறை அதிகாரி கள் ஆய்வைத் தொடர்ந்து தொழிலாளர்கள் கட்டிடத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலை யில், கட்டிடம் சாய்வதாக தகவல் பரவியதால், பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
இதையொட்டி கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு சம்பந்தம் சாலையில் சாய்வதாக புகாருக்குள்ளான மூன்று மாடி கட்டிடம்.