பள்ளி மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக அமைச்சர் விஸ்வநாதன் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்

பள்ளி மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக அமைச்சர் விஸ்வநாதன் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்
Updated on
1 min read

மதுரை: மதுரை மேலூர் தொகுதியின் எம்எல்ஏவும், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சருமான விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யக்கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரண்யாநடராஜன் என்பவர், தமிழக டிஜிபி, சிங்கப்பெண் படை அதிகாரி, மற்றும் தமிழக சைபர்க்ரைம் மற்றும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

​அந்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மேலூரில் ஜுன் 21-ம் தேதி போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவிகளும், இளம்வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் விஸ்வநாதன், அங்கு வந்திருந்த சிறுமிகளுக்கு ஊக்கமளிப்ப தாகக் கூறிக்கொண்டு, அவர்களின் அனுமதி இன்றி அநாகரிகமான முறையில் உடலின் பல்வேறு பகுதிகளில் தொட் டுள்ளார்.

சிறுமிகள் மன உளைச்சல்

மேலும், மாரத்தானில் பங்கேற்ற சிறுமிகளின் தோள்கள், தொடைகள் மற்றும் கால்களை அமைச்சர் விஸ்வநாதன் திட்டமிட்டே பலமுறை தொட்டு இழுத்துள்ளார்.

அமைச்சரின் இந்த செயலால் சிறுமிகள் மிகுந்த மன உளைச்சலுக்கும், அசவுகரியத்துக்கும் உள்ளாகினர் என்பது அங்கிருந்த வீடியோ மூலம் தெளிவாகத் தெரிகிறது. ​அமைச்சரின் அதிகார பலம் காரணமாக அவர்களால் உடனடியாக எதிர்க்க முடியவில்லை.

இந்த அநாகரிகச் சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களிலும், சிறுமிகளின் முகத்தை அப்படியே வெளியிடப்பட்டுள்ளன. இது பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தைப் பாதிக்கும் செயலாகும் இதற்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். ​ஒரு அமைச்சராகப் பொது மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவரே இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பது சட்டத்தின் மீதான நம்பிக்கையை கெடுப்பதாக அமைந்துள்ளது.

இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையை நடுநிலையோடும், சமரசமின்றியும் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் வழக்கறிஞர் சரண்யா நடராஜன் தெரிவித்துள்ளார்.

முதலுதவி செய்ததாக விளக்கம்

உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மதுரை மேலூரில் புகை​யிலை, மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்​ பொருட்​கள் மற்றும் பெண்​கள் மீதான பாலியல் குற்​றங்​களுக்கு எதி​ராக விழிப்​புணர்வு மாரத்தான் போட்டி நடத்​தப்​பட்​டது.

இதில் நூற்​றுக்கணக்​கான மாணவர்​கள் 4 கி.மீ. தூரம் பங்​கேற்​ற​தால் கடும் வெயி​லின் காரண​மாக சிலர் மயக்​கமடைந்து கீழே விழுந்​தனர்.

அந்த சிறுமிகளை மனி​தாபி​மான உணர்வோடு தொட்​டுத்​தூக்கி மயக்​கத்தை போக்​கும் வகை​யில் தண்​ணீரை தெளித்து முதலுதவி செய்​தேன்.

இதற்கு உள்​நோக்​கம் கற்​பிக்​கும் வகை​யில், திமுக ஐ.டி. விங்​கில் முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஷ் பதிவு செய்​திருப்​பது மிக​வும் அநாகரீக​மான செய​ல்’’ என்று கூறியுள்ளார்.

பள்ளி மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக அமைச்சர் விஸ்வநாதன் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசன கட்டணங்கள் உயர்வா? - அமைச்சர் ரமேஷ் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in