தகுதியான குடும்பத்தினருக்கு மட்டுமே கருணை அடிப்படையில் பணி நியமனம்: திட்டத்தை மறு ஆய்வு செய்ய கோர்ட் உத்தரவு

சென்னை உயர் நீதி​மன்​றம்

சென்னை உயர் நீதி​மன்​றம்

Updated on
1 min read

சென்னை: தகு​தி​யான குடும்​பத்​தினருக்கு மட்​டுமே கருணை அடிப்​படை​யில் பணி வழங்​கு​வதை உறுதி செய்​யும் வகை​யில் அந்த திட்​டத்தை அரசு மறு ஆய்வு செய்ய வேண்​டும் என்று உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழக பொதுப்​பணித் துறை​யில் பணி​யாற்​றிய அரசு ஊழியர் ஒரு​வர் மரணமடைந்த நிலை​யில், 9 ஆண்​டு​களுக்​குப் பிறகு அவரது மகளுக்கு கருணை அடிப்​படை​யில் பணி நியமனம் வழங்க வேண்​டும் என்று தனி நீதிபதி உத்​தர​விட்​டார். இந்த உத்​தரவை எதிர்த்து தமிழக அரசுத் தரப்​பில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது.

நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், கே.கோ​விந்​த​ராஜன் அமர்​வில் இந்த மேல்​முறை​யீட்டு வழக்கு விசா​ரணைக்கு வந்​தது. நீதிப​தி​கள் தமது உத்​தர​வில் கூறி​யதாவது: கருணை அடிப்​படை​யில் பணி நியமனம் வழங்​கு​வது ஒரு​வித சலுகை​தானே தவிர, அரசி​யல் சாசனத்​தின்​படி அமைந்த நியமனத் திட்​டம் அல்ல. அதை உரிமை​யாக​வும் கோர முடி​யாது. தகு​தி​யற்​றவர்​களை கருணை அடிப்​படை​யில் அரசுப் பணி​களில் நியமித்​தால், திறமையற்ற அரசு நிர்​வாகத்​துக்கு வழி​வகுக்​கும்.

ஒரு அரசு ஊழியர் மரணமடைந்த நிலை​யில், 9 ஆண்​டு​களுக்​குப் பிறகு அவரது மகளுக்கு கருணை அடிப்​படை​யில் பணி நியமனம் வழங்க வேண்​டும் என்ற தனி நீதிபதி உத்​தர​வும் ஏற்​புடையது அல்ல என்​ப​தால் அதை ரத்து செய்​கிறோம். எனவே, தகு​தி​யான குடும்​பத்​தினருக்கு மட்​டுமே கருணை அடிப்​படை​யில் பணி வழங்​கு​வதை உறுதி செய்​யும் வகை​யில் அத்திட்​டத்தை அரசு மறு ஆய்வு செய்ய வேண்​டும் என நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்​.

<div class="paragraphs"><p>சென்னை உயர் நீதி​மன்​றம்</p></div>
தூத்துக்குடியில் புதிய அனல்மின் நிலையம்; காஞ்சியில் செமிகண்டக்டர் ஆலை - முதல்வர் விஜய்யின் முக்கிய அறிவிப்புகள் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in