தவெக அரசுக்கு கால அவகாசம் தேவை: கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கருத்து

தவெக அரசுக்கு கால அவகாசம் தேவை: கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கருத்து
Updated on
1 min read

சென்னை: காஸ் சிலிண்​டர் விலை உயர்த்​தப்​பட்​டுள்​ளதைக் கண்டித்து இ.கம்​யூ சார்​பில் தமிழகம் முழு​வதும் மாவட்ட தலைநகரங்​களில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நேற்று நடை​பெற்​றது.

சென்​னை​யில் தங்​க​சாலை மணிக்​கூண்டு அருகே மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் தலை​மை​யில் ஆர்ப்​பாட்​டம் நடந்​தது. செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: மத்​திய கிழக்​கில் போர் சூழல் நிலவி வந்​தா​லும் ஈரான் நமக்கு வழக்​கம்​போல் எரி​வா​யு, எண்​ணெய்​களை வழங்கி வரு​கிறது.

நட்பு நாடான ரஷ்​யா​வும் தங்கு தடை​யில்​லாமல் எரி​வாயு வழங்​கு​கிறது. ஆனால் இந்​தி​யா​வில் காஸ் சிலிண்​டர், பெட்​ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்​கிறது. இதனால் ஹோட்​டல்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளன.

பெட்​ரோல் விலையை எண்​ணெய் நிறு​வனங்​களே தீர்​மானிக்​கின்​றன. மத்​திய அரசே விலையை தீர்​மானிக்​கிற பொறுப்பை ஏற்க வேண்​டும். இல்​லை​யென்​றால் எரி​வா​யு, எண்​ணெய் மீதான விலையை நிர்​ண​யம் செய்​யும் அதிகாரத்தை மாநிலங்​களுக்​காவது வழங்க வேண்​டும்.

தவெக புதிய கட்​சி, தற்​போது தான் ஆட்​சிக்கு வந்​திருக்​கிறது. இதன் கட்​டமைப்பு புதிது. இதனால் தடு​மாறு​வது இயல்​பு. அவர்​களுக்கு கால அவகாசம் தேவை. பெண்​களுக்கு பாதிப்பு ஏற்​படு​வது ஒவ்வொரு குடும்​பத்​தை​யும் பாதிக்​கும்.

எனவே சட்​டம் - ஒழுங்கில் தவெக அரசு உறு​தி​யாக இருக்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

தவெக அரசுக்கு கால அவகாசம் தேவை: கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கருத்து
மாணவர்களுடன் காலை உணவருந்தி உணவின் தரத்தை சோதித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in