

சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவது முக்கியம் என்பதால் அதற்காக தமிழ்நாடு மின் வாரியம் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களின் அனைத்து பகுதிகளிலும் முன்கூட்டியே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், அனைத்து மையங்களிலும் களப் பணியாளர்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கவும், கூடுதல் மின் ஆதாரங்களும், மாற்று ஏற்பாடுகள் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அனைத்து மையங்களிலும் தடையற்ற மின் விநியோகம் நடைபெறுவதை உறுதி செய்ய கூடுதல் இயக்குநர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் கொண்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.